Monday, May 23, 2022

[பத்யம் #16] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #16] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #16]

4ர்மபித ஹரித4ர்மரூபனு

கர்மகு3ணவனுஸரிஸி பொரெவனு

நிர்மிஸுவ ப்ரதியுக33 4ர்மவ கர்த்ரு தானாகி3 |

பெ1ர்மெயிந்த3லி பொரெவ தே3வன

கர்மவஷவே ஸ்மரணெ மாத்ரவெ

4ர்மவெந்த3னு கலியுக3தி3 ஹரி ஒலிமெ 3ஹு ஸுலப4 ||16 

பர்மபித ஹரி - பிரம்மதேவனின் தந்தையான ஸ்ரீஹரி; தர்மரூபனு - தர்மமே வடிவானவன்; கர்மகுணவனுஸரிஸி - கர்ம, குணங்களை அனுசரித்து; பொரெவனு - அருள்கிறான்; ப்ரதியுகத தர்மவ நிர்மிஸுவ - ஒவ்வொரு யுகத்தின் தர்மத்தையும் நிர்ணயிக்கும்; கர்த்ரு தானாகி - கர்த்ரு இவனே ஆகிறான்; பெர்மெயிந்தலி பொரெவ - கருணையுடன் கூறுகிறான்; கர்மவஷவே - முற்பிறவியில் செய்த கர்மங்களிக்கேற்பவே; தேவன ஸ்மரணெ மாத்ரவெ - பகவந்தனின் ஸ்மரணை மட்டுமே; கலியுகதி - கலியுகத்தில்; தர்மவெந்தனு - தர்மம் என்றான்; ஹரி ஒலிமெ - ஸ்ரீஹரியை மகிழ்விப்பது / அவன் தரிசனம் பெறுவது; பஹு ஸுலப - மிகவும் சுலபம் என்றான். 

கலியுகத்தில் ஸ்ரீஹரியின் அருளைப் பெறுவது எப்படி என்னும் விதத்தினை இந்த பத்யத்தில் விளக்குகிறார் ஸ்ரீதாஸர். 

பிரம்மதேவனின் தந்தையான ஸ்ரீஹரி, தர்மமே வடிவானவன். ஜீவர்களின் கர்ம, குணங்களை அனுசரித்து அருள்கிறான். ஒவ்வொருயுகத்தின் தர்மத்தையும் நிர்ணயிக்கும் கர்த்ரு இவ்னே ஆகிறான். முற்பிறவியில் செய்த கர்மங்களுக்கேற்பவே, அருள் என்று கூறுகிறான். கலியுகத்தில், ஸ்ரீஹரியின் ஸ்மரணை மட்டுமே தர்மம். மேலும் கலியுகத்தில் ஸ்ரீஹரியின் தரிசனம் பெறுவது மிகவும் சுலபம் என்கிறான். 

ஹரிகதாம்ருதஸாரத்தில் ஸ்ரீஜகன்னாததாசர் இந்த விஷயத்தை பல இடங்களில் விவரித்துள்ளார். 

வாரித3னு மளெகெ3ரெயெ பெ3ளெதி3

பூ4ருஹங்க3 சித்ரப2லரஸ

பே3ரே பே3ரிப்ப1ந்தெ1 3ஹுவித4 ஜீவரொளகி3த்து3 |

மாரமணனவரவர யோக்யதெ1

மீரத3லெ கு3 1ர்மக1 அனு

ஸார நடெ3ஸுவ தே3வனிகெ3 வைஷம்ய வெல்லிஹுதோ3 ||

(வ்யாப்தி ஸந்தி #23) 

ஸ்ரீஹரி அனைத்து ஜீவர்களிலும் இருந்துகொண்டு, அந்தந்த ஜீவர்களின் யோக்யதைக்கேற்ப, அவர்களின் குண, கர்மங்களுக்கேற்ப, பலன்களைக் கொடுக்கிறான். இத்தகைய ஸ்ரீஹரிக்கு பாரபட்சம் எங்கிருக்கிறது?. 

ஜலவ னப1ஹரிஸுவ 3ளிகெ3 3

ட்ட1லனுளிது3 ஜைக4ண்டெ கை1பி1டி3

தெ3ளெது3 ஹொடெ3வந்த33லி ஸந்த11 1ர்த்ரு தா1னாகி3 |

ஹலத4ரானுஜ புண்ய பாபத3

2லக3ளனு தே3வாஸுரர 3

தொ3ளு விபா43 மாடி3 உணிஸுத ஸாக்ஷியாகி3ப்ப ||25

(வ்யாப்தி ஸந்தி #25) 

கர்த்ரு ஆன ஸ்ரீஹரி, ஜீவர்களின் பாவ, புண்ணியங்களின் பலன்களை அவர்களுக்கே கொடுக்கிறான் என்கிறார். 

கலியுகத்தில் ஸ்ரீஹரியின் ஸ்மரணை மட்டுமே தர்மம் என்பதற்கு பல்வேறு ஹரிதாஸ கிருதிகள் உள்ளன. 

மரண ஜனன தோஷகளிகதி தூரதரனெனிப

ஸ்மரணெ ஸந்தத பேகு துராசார பிடபேகு

(ஸ்ரீவாதிராஜர்) 

ஸ்மரணெயொந்தே ஸாலதே

கோவிந்தன நாமவொந்தே ஸாலதே

(ஸ்ரீபுரந்தரதாஸர்) 

மலகு3வாக3லி ஏளுவாக3லி

குளிது மாதாடு3தலி மனெயொளு

கெலஸக3 மாடு3தலி மைதொளெவாக3 மெலுவாக3 |

(நாமஸ்மரண ஸந்தி #3) 

என எல்லா சமயங்களிலும் பகவந்தனின் நாமஸ்மரணையை செய்து கொண்டேயிருக்க வேண்டும் என்கிறார் ஸ்ரீஜகன்னாத தாசர். 

ஸுலப4னோ ஹரி தன்னவரனர

4ளிகெ3 பிட்டக3லனோ ரமாத4வன

ஒலிஸலரியதெ3 பாமரரு 3ளலுவரு 4வதொ3ளகெ3 ||

(கருணா ஸந்தி #5) 

ஸ்ரீஹரியின் தரிசனத்தைப் பெறுவது மிகவும் சுலபம், ஆனால் இதையெல்லாம் அறியாமல் மக்கள் இன்னும் சம்சாரத்தில் உழல்கின்றனர் என்கிறார் ஸ்ரீஜகன்னாததாசர்.


***



No comments:

Post a Comment