[பத்யம் #5] - ஹரிதாஸ த3ர்பண
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #5]
புண்ட3லீககெ3 ஒலித3 விட்டலன
க2ண்ட3கு3ண கொண்டா3டெ3 ப3ளஸுவ
தண்ட3 தண்ட3த3 பா4ஷெயாத3ரு மான்ய ஸஜ்ஜனகெ |
புண்ட3ரீகத3ளாயதாக்ஷன
கண்டு3 பொக3ளத3 லோகவார்த்தெய
ப4ண்டு3 மாதின பா4ஷெ உத்தமவாத3ரு த்யாஜ்ய ||5
புண்டலீககெ ஒலித விட்டலன - புண்டலீகனுக்கு தரிசனம் அளித்த விட்டலனின்; கண்டகுண - ஏதாவது ஒரு குணத்தையாவது; கொண்டாடெ - கொண்டாடுவதற்கு; பளஸுவ - பயன்படுத்தப்படும்; தண்டதண்டத - எந்தவொரு பிரதேசத்தின் (நாட்டின் பகுதியின்); பாஷெயாதரு - மொழியானாலும், ஸஜ்ஜனகெ - சஜ்ஜனர்களுக்கு; மான்ய - அது மரியாதைக்குரிய மொழியே ஆகும்; புண்டரீக தளாயதாக்ஷன - தாமரைக் கண்ணனான பகவந்தனை; கண்டு பொகளத - போற்றிப் புகழாத; லோகவார்த்தெய - நாடக வசனங்களான; பண்டு மாதின - கேலிப் பேச்சுக்களைக் கொண்ட; பாஷெ - மொழி; உத்தமவாதரு - அது மிகச் சிறந்ததாகவே இருந்தாலும்; த்யாஜ்ய - அதனை புறக்கணிப்பார்கள்.
மொழி முக்கியம் இல்லை; சொல்லப்படும் விஷயமே முக்கியம் என்னும் விஷயத்தை திரும்ப இந்த பத்யத்தில் வலியுறுத்துகிறார் ஸ்ரீதாசர்.
புண்டலீகனுக்கு தரிசனம் அளித்த விட்டலனின் ஏதோவொரு குணத்தையாவது சொல்லி கொண்டாடுவதற்கு பயன்படுத்தப்படும் மொழியானது, அது நாட்டின் எந்தவொரு பகுதியில் பயன்படுத்தப்படும் பேசுமொழியாக இருந்தாலும் பரவாயில்லை. கற்றறிந்த சஜ்ஜனர்கள் அதற்கு (அந்த பேசுமொழிக்கு) மான்யதை கொடுப்பார்கள். மாறாக, அந்த தாமரைக் கண்ணனை போற்றிப் புகழாமல், வெறும் நாடக வசனங்களாக / கேலிப் பேச்சுகளைக் கொண்ட மொழியானது, அது உத்தமமான மொழியாகவே இருந்தாலும், அந்த ஸஜ்ஜனர்கள் அதனை புறக்கணிப்பார்கள்.
இதே கருத்தினை, ஸ்ரீஸ்ரீத விட்டலதாசர், தனது ஹரிகதாம்ருதசாரத்தின் பல ஸ்ருதியின் ஒரு பத்யத்தில் இவ்வாறு சொல்லியிருக்கிறார்.
ப்ராக்ருதோக்திகளெந்து பரிதெ ம
ஹா க்ருதக்னரு ஜரிவரல்லதெ
ஸ்வீக்ருதவெ மாடதலெ பிடுவரெ சுஜனராதவரு |
ஸ்ரீக்ருதீபதியமல குணகளு
ஈ க்ருதியொளுண்டாத பளிகிது
ப்ராக்ருதவெ சம்ஸ்க்ருதத சடகரவேனு சுகுணரிகெ ||5
இந்த கிரந்தமானது, ப்ராக்ருத கிரந்தம் என்று திட்டும், மஹா க்ருதக்னர்கள் (இந்த கிரந்தத்தால் பயன் பெற்றவர்கள்) சிலர் இருந்தாலும், ஸுஜனர்கள் இதனை ஏற்றுக் கொள்ளாமல் விடமாட்டார்கள். அப்ராக்ருதமான பரமாத்மனை வர்ணிக்கும் இந்த கிரந்தத்தை ப்ராக்ருதம் என்று எப்படி சொல்லமுடியும்?.
***
No comments:
Post a Comment