[பத்யம் #14] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #14]
பெ3ரள எணிகெயொளுள்ளித3 கெலவரு
து3ருளஜனத1தி1க3ஞ்சி மௌனவ
த4ரிஸி மனதொ3ளு யோக3சரிஸுத கௌ3ப்ய ஸுக2ஸுரிது3 |
இருதிரலு ஈ ரீதி ஸத்வர
இரவு பா3ஹ்யதொ3ளட3கி3 விட்டலன
சரணஸேவெய பரியு தோரத3லாய்து ஸஜ்ஜனகெ ||14
பெரள எணிகெயொளுள்ளித - விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்த; கெலவரு - சிலர்; துருள ஜனததிகஞ்சி - கெட்டவர்களின் குழுக்களுக்கு பயந்து; மௌனவ தரிஸி - மௌனமாக இருந்து; மனதொளு யோகசரிஸுத - மனதில் யோக ஸாதனையை செய்ய; கௌப்ய - ரகசியமாக; ஸுகஸுரிது - ஆனந்தத்தை அனுபவித்தவாறு; இருதிரலு - இருக்கையில்; ஈ ரீதி - இப்படியாக; ஸத்வர இரவு - ஸஜ்ஜனர்களின் இருப்பு; பாஹ்யதொளு - புறத்தில் (வெளியில்); அடகி - அடங்கி; விட்டலன சரணஸேவெய பரியு - விட்டலனை சேவை செய்யும் விதங்கள்; ஸஜ்ஜனகெ - சஜ்ஜனர்களுக்கு; தோரதலாய்து - தெரியாமல் போனது.
ஹரிதாஸ ஸாகித்யத்தின் தோற்றத்திற்கான காலம் கனிந்து வந்திருக்கிறது. சம்ஸ்கிருதம் தெரியாத பாமர மக்கள், ஞான, பக்தி, வைராக்கியங்கள் மற்றும் தத்வ சித்தாந்த ரகசியங்களை அறிவதில் சிறிது தொய்வு ஏற்பட்டது. நமக்குத் தெரிந்த மொழியில், நமக்குப் புரிவது போல, யாராவது ஸத்-விஷயங்களை சொல்ல மாட்டார்களா என்று எண்ணியவாறு, அத்தகைய ஸஜ்ஜனர்கள் காத்திருந்தனர் என்று அந்த காலத்து மக்களின் நிலையை படம் பிடித்துக் காட்டுகிறார் ஸ்ரீதாஸர்.
யதி த்ரயர்களின் (ஸ்ரீஸ்ரீபாதராயர், ஸ்ரீவ்யாஸராஜர், ஸ்ரீவாதிராஜர்) ஆகியோரின் காலத்திலேயே, ஸ்ரீமன் மத்வாசார்யரின் தத்வ கிரந்தங்களின் மேல் பல டீகைகள், டிப்பணிகள், பாஷ்யங்கள் வந்திருந்தாலும், அவை சம்ஸ்கிருதம் கற்றறிந்த பண்டிதர்களுக்கு மட்டுமே புரிந்ததாக இருந்தது. பாமர மக்களுக்கு யதார்த்த ஞானம் கிடைப்பதில் சிறிது தடை ஏற்பட்டது. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்த அத்தகைய ஸஜ்ஜனர்கள், கெட்டவர்களின் குழுக்களுக்கு பயந்து, ரகசியமாக, தங்கள் மனதிலேயே, தங்களுக்குத் தெரிந்த அளவில், யோக ஸாதனையை செய்தவாறு இருந்தனர். இதனால், விட்டலனை சேவை செய்யும் விதங்கள் அவர்களுக்கு தெரியாமல் போனது.
***
No comments:
Post a Comment