Saturday, April 2, 2022

ஸ்லோகம் #39: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #39: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[ஸ்லோகம் 39]

ஹோத3ஹோதெ3டெ33ளலி பரிபரி பா4தி4ஸித3 ஷத்ருக3 கெ3லியுத

பா33ராயண ஷிலெய படெ33ரு 4ர்மஸுதனிந்த3 |

வேத3னாயகனாக்ஞெயலி பரமாத3ரவ தோரித3ரு 3ஷமதி

ஷோதி4ஸித3 தாத்பர்யக3 பேளித3ரு பா4ரதகெ ||39 

ஹோதஹோதெடெகளலி - சென்ற இடங்களிலெல்லாம்; பரிபரி - பலவிதமாக; பாதிஸித - எதிர்த்த; ஷத்ருகள - எதிரிகளை; கெலியுத - வென்றவாறு; தர்மஸுதனிந்த - ஸ்ரீவேதவ்யாஸரிடமிருந்து; பாதராயண ஷிலெய - வ்யாஸ முஷ்டிகளை; படெதரு - பெற்றார்; வேதனாயகன - வேத நாயகனான வேதவ்யாஸரின்; ஆக்ஞெயலி - ஆணையில்; பரமாதரவ தோரிதரு - சிறந்த பக்தி / மரியாதையை காட்டினார்; தஷமதி - ஸ்ரீமதாசார்யர்; பாரதகெ - மகாபாரதத்திற்கு; ஷோதிஸித - நிர்ணயம் செய்த; தாத்பர்யகள - தாத்பர்யங்களை; பேளிதரு - எடுத்துரைத்தார். 

இரண்டாம் முறையான பதரி பயணத்தின் மகிமைகளை இந்த ஸ்லோகத்திலும் தொடர்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

சென்ற இடங்களிலெல்லாம், பலவிதமாக எதிர்த்த எதிரிகளை வென்றவாறு, ஸ்ரீவேதவ்யாஸரிடமிருந்து, வ்யாஸ முஷ்டிகளைப் பெற்றார். வேத நாயகனான வேதவ்யாஸரின் ஆணையின்படி, சிறந்த பக்தி / மரியாதையை காட்டினார் ஸ்ரீமதாசார்யர். மகாபாரதத்திற்கு நிர்ணயம் செய்த தாத்பர்யங்களை எடுத்துரைத்தார். 

மத்வ விஜய பத்தாம் சர்க்க விஷய மகிமைகள் இங்கு தொடர்கின்றன. 

கதாசிச்சோராணாம் நிகரமவலோக்யாபி பததாம்

அவஸ்தாப்ய ஸ்வீயான் கரகபட பிண்டார்த்த மதிக்ருத் |

சரன்னேதேஷ்வேதானத மித இஹ்ராகாத யதஹோ

விபு: ஸம்மோஹ ப்ராக விஜய இவ ஸம்ஷப்தக கணான் || 10-20 

பயணத்தில் இவரிடமிருந்த பணத்தை அபகரிக்க ஒரு முறை கொள்ளையர்கள் இவர்கள் மேல் பாய்ந்தனர். ஆசார்யர் உடனடியாக ஒரு துணியை மூட்டையாகக் கட்டி, அதில் செல்வம் இருப்பதுபோல் பாவித்து, அவர்களுக்கு நடுவில் வைத்தார். கொள்ளையர்கள் அந்த மூட்டையை எடுப்பதற்காக, தங்களுக்குள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு இறந்தனர். இது எப்படி இருந்ததென்றால், மகாபாரதப் போரினில், சம்சப்தகர்கள் அர்ஜுனனை எதிர்த்துப் போரிட்டபோது, அர்ஜுனன் சம்மோகன அஸ்திரத்தைப் பிரயோகித்ததால், அவர்கள் அதற்கு வசப்பட்டு, தங்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு இறந்தனர். ஆசார்யர் பயணத்தைத் தொடர்ந்தார். 

அன்யத்ர சோரான் தன்ய ப்ரவரோsஸௌ

ஷூரான் ஷத ஸங்கான் ப்ராப்தான் ஸ்வ ஜிகாம்ஸூன் |

ஏகேன து சிஷ்யேணாsக்ருஷ்ட குடாரான்

நிஸ்தாடித யூத்யானத்ராவயத த்ராக் || 10-21 

இன்னொருமுறை, மிகவும் பயங்கரமான வலிமையுள்ள நூறுக்கும் மேற்பட்ட கொள்ளையர் கும்பலொன்று ஆசார்யரின் மற்றும் அவரது சிஷ்யர்களின் மேல் பாய்ந்தபோது, தமது சிஷ்யரான ஸ்ரீஉபேந்திர தீர்த்தரின் (புத்திகெ மடத்து மூலபுருஷர்) மூலமாக, திருடர்கள் கையிலிருந்த கோடலியைப் பறித்து, அதன்மூலமாக அவர்கள் அனைவரையும் ஓடஓட விரட்டினார். 

ப்ராப நாராயணத: ஷுத்த ஷிலாத்ம ப்ரதிமா: |

யாஸு பத்மா ஸஹிதோ தோஷ்யஹித: ஸன்னிஹித: || 10-24 

மேல் பதரிக்குச் சென்ற ஸ்ரீமத்வாசார்யர், வேதவியாசரிடமிருந்து, லட்சுமி நாராயணின் சன்னிதானம் இருக்கும் எட்டு சிலாரூப-ப்ரதிமைகளைப் பெற்றார். வேதவியாசர் அருளிக் கொடுத்த அபூர்வமான அந்த பிரதிமைகளுக்குவியாசமுஷ்டிஎன்று பெயர். மொத்தம் எட்டு இருந்தன. இவற்றில் ஸ்ரீலட்சுமி நாராயணரின் சன்னிதானம் இருந்ததால், இவை லட்சுமி நாராயண பிரதிமைகள் என்றும் அழைக்கப்பட்டன. 

பாராஷர்ய: பரதத்வ ப்ரஸித்தை தாத்பர்யார்த்தம் பரமம் பாரதஸ்ய |

வ்யக்தும் வக்த்ரும் நியுனக்தி ஸ்ம ஸாக்ஷாத் ஏனம் தன்யம் புவனே மன்யமான: || 10-25 

ஸ்ரீமதாசார்யர், வாயுதேவரின் அவதாரம் என்பதை அறிந்திருந்த, பராசர முனிவரின் மகனான ஸ்ரீவேதவ்யாஸர், இவரே பரதத்வத்தின் உண்மையான ரகசியங்களை விளக்க வல்லவர் என்பதை அறிந்து, மகாபாரத்திற்கு நிர்ணய கிரந்தம் எழுதுமாறு ஆணையிட்டார். 

ஸ்ரீமதாசார்யர் தனது இரண்டாம் பதரி யாத்திரையை முடித்துக் கொண்டு, திரும்பி வரும் விஷயத்தை அடுத்த ஸ்லோகத்தில் விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

***


No comments:

Post a Comment