ஸ்லோகம் #7: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ
இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்
தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[ஸ்லோகம் 7]
கோ3ப்ரதா3யக
விப்ரவர்யகெ3 க்ஷிப்ரத3லி
ஸுப்ரக்3ஞெயித்தனு
ஸ்வப்ரபா4வதி3 நிஜஜனர க்3ரஹப4யவ நீகி3ஸுத |
விப்ரஸதி ஹொரகி3ரலு ரோத3ன
தப்பிஸலு நிஜ ஸஹஜெயுணிஸித3
ப்ரப்ரபக்வ குலித்த2 பு4ஜிஸி ஜீர்ணிஸித3 க்ஷணதி3 ||7
கோப்ரதாயக - (குழந்தைக்கு பால் குடிப்பதற்காக) பசு கொடுத்த; விப்ரவர்யகெ - பிராமணருக்கு; க்ஷிப்ரதலி - விரைவில் (அடுத்த பிறவியில்); ஸுப்ரக்ஞெயித்தனு - ஆசார்யரின் சாஸ்திர ஞானத்தை அளித்தான்; ஸ்வப்ரவாவதி - தன்னுடைய சக்தியால்; நிஜஜனர - தன் குடும்பத்தினரை; க்ரஹபயவ - பூதத்தின் பயத்தினை; நீகிஸுத - போக்கியவாறு; விப்ரஸதி - மத்யகேஹ பட்டரின் மனைவி; ஹொரகிரலு - வேலை விஷயமாக வெளியே சென்றிருக்கையில்; ரோதன - அழுகையிலிருந்து; தப்பிஸலு - தப்பிப்பதற்கு; நிஜ ஸஹஜெயுணிஸித - தன் அக்கா உண்ணச் செய்த; ப்ரப்ரபக்வ - நன்றாக வெந்த; குலித்த - கொள்ளு; புஜிஸி - உண்டு; ஜீர்ணிஸித க்ஷணதி - நொடியில் அதனை ஜீர்ணம் செய்தான்;
பாலகன் வாசுதேவனின் பால லீலைகளை இங்கு சொல்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். குழந்தை பால் குடிப்பதற்காக, ஒரு பசுவை தானம் அளித்த பிராமணருக்கு, விரைவில் ஆசார்யரின் சாஸ்திர ஞானத்தை அளித்தான். தன்னுடைய சக்தியால் தன் குடும்பத்தினரை, பூதத்தின் பயத்தினை போக்கினான். மத்யகேஹ பட்டரின் மனைவி (வாசுதேவனின் தாய்), வேலை விஷயமாக வெளியே சென்றிருக்கையில், அழுகையிலிருந்து தப்புவதற்காக, தன் அக்கா கொடுத்த நன்றாக வெந்த கொள்ளினை உண்டு, நொடிப்பொழுதில் அதனை ஜீர்ணம் செய்தான்.
பாதும் பயாம்ஸி
ஷிஷவே கில கோ பிரதோஸ்மை
பூர்வாலய: ஸ்வ ஸுத
ஸூனுதயா ப்ரஜாத: |
நிர்வாண
ஹேதுமலபிஷ்ட பராத்ம வித்யாம்
தானம் த்ருவம் பலதி பாத்ர குணானுகூல்யாத் ||2-30
மடில்லாயா என்னும் பிராமணர் குழந்தை பால் குடிப்பதற்காக, மத்யகேஹ பட்டருக்கு, ஒரு பசுவை தானம் அளித்தார். இத்தகைய நற்செயலால், அவர் மறுபடி அவருடைய மகனுக்கே பிறந்து, ஸ்ரீமதாசார்யரின் சாஸ்திரங்களை கற்றறிந்தார். தகுந்தவருக்கு கொடுத்த தானமானது, அதிக பலன்களைத் தரும் என்னும் ‘ஸத் பாத்ர தான’ விஷயத்தை இந்த ஸ்லோகம் விளக்குகிறது.
ஆவிஷ்ய பூருஷமுவாச
மஹா க்ரஹோsஸௌ
அஸ்மத் விஹார
ஸமயோபகதான் ஸமஸ்தான் |
யச்சக்தி குப்தி
ரஹிதானலமஸ்மி ஹந்தும்
லோகேஷ்வர: ஸ பத பால தம: கிலேதி ||2-34
இந்த குழந்தையினாலேயே நீங்கள் தப்பித்தீர்கள். இது சத்தியம். நீங்கள் அனைவரும் உயிர் பிழைத்திருப்பது, இந்த குழந்தை செய்த புண்ணியத்தாலேயே. இவன் சாதாரண குழந்தையல்ல. உலகத்தை காப்பவன், உலகத்தின் பிராணநாதன் இவனே - என்று இவர்களை தாக்க வந்த பூதத்தின் குரல் கேட்டது.
கர்தவ்ய மௌட்யமபி
பத்ய நிரூப்ய ஸா தம்
ப்ராபோஜயத் கலு குலஸ்த குலம் ப்ர பக்வம் | 2-38
குழந்தையின் அழுகையை நிறுத்தமுடியாத அந்த சிறுமி, அங்கு வைத்திருந்த கொள்ளினை அக்குழந்தைக்கு கொடுத்தாள்.
ஆரோக்ய ஷாலினி
புரேவ ததாபி புத்ரே
விஸ்மேரதாமுப ஜகாம ஜனன்யமுஷ்ய | 2-41
மகனை நினைத்தவாறு வீட்டிற்கு விரைவாக வந்த தாய், குழந்தை நிரம்பிய வயிறுடன் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு வியப்படைந்தாள்.
குழந்தை வாசுதேவனின் பாலலீலைகளை அடுத்த ஸ்லோகத்திலும் தொடர்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
***
No comments:
Post a Comment