Wednesday, March 23, 2022

ஸ்லோகம் #29: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #29: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[ஸ்லோகம் 29]

குஷலபு3த்3தி3 அஸம ப்ரதிபெ4யு ஹொஸதெரெத3 ப்ரபெ3யிந்த3லொப்புவ

3ஷமதிய தருஷனதி3 ஜனதெகெ3 மூடி3தச்சரியு |

அஸுபதிக3ளாத3ரதி3 சாஸ்திரத3 ரஸவ பு4ஞ்சிஸி கு3ருஸஹித மா

நஸ விகாஸதி3 ஹொரடு ஸேரித3ராஸ்ரமாந்த1ரவ ||29 

குஷலபுத்திய - அற்புத புத்தியின்; அஸம பிரதிபையு - ஒப்புமையற்ற ஆளுமையும்; ஹொஸதெரெத - புதுவிதமான; ப்ரபெயிந்தலொப்புவ - தேஜஸ்ஸையும் கொண்டு ஒளிரும்; தஷமதிய தருஷனதி - தஷப்ரமதி எனப்படும் ஸ்ரீமதாசார்யரின் தரிசனத்தால்; ஜனதெகெ - அங்கிருந்த முனிவர்களுக்கு; மூடிதச்சரியு - வியப்பு / ஆச்சரியம் ஏற்பட்டது. அஸுபதிகளு - பிராணதேவர்; ஆதரதி - மிகவும் மரியாதை / பக்தியுடன்; சாஸ்திரத ரஸவ புஞ்சிஸி - சாஸ்திர ரசத்தினை பருகி; மானஸ விகாஸதி -  மனம் தூய்மையடைந்து ; குருஸஹித - குருவான ஸ்ரீவேதவ்யாஸருடன்; ஹொரடு - புறப்பட்டு; அந்தரவ - தூரத்தை பயணம் செய்து; ஆசிரமவ - ஆசிரமத்தை; சேரிதரு - சேர்ந்தார். 

இந்த ஸ்லோகத்திலிருந்து மத்வவிஜய எட்டாம் சர்க்கத்தை விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

அற்புத புத்தியின் ஒப்புமையற்ற ஆளுமையும், புதுவிதமான தேஜஸ்ஸையும் கொண்டு ஒளிரும் தஷப்ரமதி எனப்படும் ஸ்ரீமதாசார்யரின் தரிசனத்தால், அங்கிருந்த முனிவர்களுக்கு மிகவும் வியப்பு ஏற்பட்டது. பிராணதேவர் மிகவும் மரியாதை / பக்தியுடன், சாஸ்திர ரஸத்தினை பருகி, மனம் தூய்மையடைந்து, குருவான ஸ்ரீவேதவ்யாஸருடன் புறப்பட்டு, பயணம் செய்து, நாராயண ஆசிரமத்தை அடைந்தார். 

மத்வ விஜய எட்டாம் ஸர்க்க முதல் ஸ்லோகம் இந்த விஷயத்தை இவ்வாறு வர்ணிக்கிறது. 

இதிஹாச சுந்தர புராண சூத்ர சத்ப்ரிய பஞ்சராத்ர நிஜபாவ சம்யுதம் |

அஸ்ருணோதனந்த ஹ்ருதனந்த தோsசிராத் பரமார்த்தமப்ய கணிதாகமாவலே: || (8-4) 

பதரிகாஸ்ரமத்திலிருந்த முனிவர்களுக்கு பூர்ணப்ரக்ஞரின் தேஜஸ்ஸினைக் கண்டு ஆச்சரியமானது. ஆசார்யர் தத்வஞானத்தைப் பற்றி மேலும் அறிவதற்கு வேதவியாசரை அணுகினார். வேறு தேவதைகள் யாருக்கும் தெரியாத விஷயங்களை கற்பித்த வேதவியாசரின் குருத்வம் மற்றும் சத்பாத்திரரான ஸ்ரீமதாசார்யரின் சிஷ்யத்வத்தைக் கண்ட தேவதைகள் அவர்களை வணங்கினர். இத்தகைய சிறப்பு விஷயங்களை மகாஞானியான பூர்ணபிரக்ஞருக்கு உபதேசம் செய்தார். ருஜுபுங்கவரான ஆசார்யரின் ஞானமானது மேலும் வளர்ந்தது. 

அத பாதராயண ஸஹாய ஸம்பதா

ப்ரயயௌ ப்ரணந்துமமிதாந்தரோ யுத: |

அபி நாதிராயண பதோதிதம் ஹரே:

வபுரந்தரம் லஸிதமாஸ்ரமாந்தரே || 8-6 

ஸ்ரீவேதவ்யாஸரிடமிருந்து நற்சாஸ்திரங்களை கேட்டபிறகு, ஸ்ரீமத்வாசார்யர், தன் குருவுடன், அவரின் இன்னொரு ரூபமான ஸ்ரீமன் நாராயணனின் இருப்பிடத்திற்கு சென்றார். 

இந்த விஷயத்தையே ஸ்ரீஸ்ரீபாதராஜர், மத்வ நாமா ஸ்லோகம் #25ல் இவ்வாறு கூறியிருக்கிறார். 

நிர்பயதி சகல சாஸ்திரவ படிஸி -- என்னும் வாக்கியத்தில் முந்தைய அவதாரங்களைப் போலவே இங்கும் பாராயணம் செய்து (செய்வித்து) முடித்தார் என்ற செய்தி இருக்கிறது. அனாதி காலத்திலிருந்தே அனைத்து சாஸ்திரங்களின் ஞானம் முழுமையாக இருந்ததின் காரணமாக, நினைத்த மாத்திரத்திலேயே அனைத்தையும் தெரிந்து கொள்ளும் சாமர்த்தியம் கொண்டவரான ருஜுகணஸ்தர்  ஸ்ரீமன் மத்வாசார்யர். இப்படியாக அவர் எதையும் புதிதாக படிக்கவேண்டியதில்லை. பகவந்தனின் விஷயத்தில் மட்டும், அதுவும் ருஜுகணஸ்தருக்கு மட்டும் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்களை நேரடியாக பகவந்தனிடமிருந்தே தெரிந்து கொண்டிருக்கிறார். 

மத்வ விஜய எட்டாம் சர்க்கத்தைப் பற்றியும், இந்த சர்க்கத்தைப் படிப்பதால் வரும் பலன்களைப் பற்றியும் மாதனூரு ஸ்ரீவிஷ்ணு தீர்த்தர், தமது ஸ்ரீமத் ஸுமத்வவிஜய ப்ரமேய பல மாலிகா கிருதியில் இவ்வாறு கூறுகிறார். 

நாராயணம் நமஸ்க்ருத்ய தத்ரஸ்த2ம் கு3ருணா ஸஹ |

3தஸ்தாப்4யாமனுக்ஞாதோ பா4ஷ்யம் கர்த்தும் ஸதாம் முதே3 ||9|| 

குருகளான ஸ்ரீவேதவியாசருடன் நரநாராயணனை நமஸ்காரம் செய்து, அந்த பரமாத்மனின் மத்ஸ்ய, கூர்மாதி அனந்த அவதாரங்களை சிந்தனை செய்து, தத்வங்களைக் கேட்டு, அவர்கள் இருவரிடமிருந்து ஆணையைப் பெற்று, சஜ்ஜனர்களின் மகிழ்ச்சிக்காக மற்றும் நலனுக்காக தம் அவதாரத்தின் முக்கிய காரியமான ஸூத்ர பாஷ்யத்தை இயற்றுவதற்கு அங்கிருந்து புறப்பட்டார். 

விசார: ஸாத4னௌக4ஸ்ய ஞேயரூப ப்ரபோ34னம் |

உபாஸாயாமதிஷயோ தா3ர்ட்4யம் 4க்திர்ஹரௌ கு3ரௌ ||19|| 

எட்டாம் சர்க்கம் படிப்பதால் வரும் பலன் : பிம்போபாசனையில் ஈடுபாடு. 

நாராயண ஆசிரமத்தில் ஸ்ரீமன் நாராயணனை ஸ்ரீமதாசார்யர் தரிசித்த விதத்தை அடுத்த ஸ்லோகத்தில் விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

***


No comments:

Post a Comment