Friday, September 30, 2022

[பத்யம் #132] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #132] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் 132]

ஸ்ரீ ஸமீரர மதத3 ஸாரவ

வாஸுதே3வன ஒலுமெ 4யஸுவ

தா3ஸகூட1ஸ்த2ரிகெ3 பேள்து3து3 வினய பா4வத3லி |

தோ1ஷதோர்புது3 4க்தவ்ருந்த3கெ1

ராஶி வித்3யவ கலிது வாத3தி3

க்லேபடு3தலி காது3வரிகி3து3 பே3ஸரவு ஸஹஜ ||132 

வாஸுதேவன - ஸ்ரீவாஸுதேவனின்; ஒலுமெ பயஸுவ - தரிசனத்தை (அருளை) விரும்பும்; ஸ்ரீஸமீரர மதத ஸாரவ - ஸ்ரீவாயுதேவரின் மதத்தின் ஸாரத்தை; தாஸகூடஸ்தரிகெ - ஹரிதாஸ கூடத்தவர்களுக்கு; வினய பாவதலி - மிகவும் பக்தி மரியாதையுடன்; பேள்துது - இதனை சொல்ல வேண்டும்; பக்தவ்ருந்தகெ - அந்த பக்த கூட்டத்திற்கு; தோஷ தோர்புது - மிகுந்த மகிழ்ச்சி உண்டாகிறது; ராஷி வித்யவ கலிது - அதிகமான கல்வியைக் கற்று; வாததி - வாதத்தில்; க்லேஷபடுதலி - மிகவும் கஷ்டப்பட்டு; காதுவரிகிது - போட்டி போடுபவர்களுக்கு; பேஸரவு - வெறுப்பு (உண்டாவது); ஸஹஜ - சகஜமான விஷயமே. 

இந்த ஹரிதாஸ தர்பண கிருதியை அனைத்து ஸ்ரீஹரி பக்தர்களுக்கும் எடுத்து சொல்ல வேண்டும். அதனால், அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியே உண்டாகும் என்கிறார் ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர். 

ஸ்ரீவாஸுதேவனின் தரிசனத்தை (அருளை) விரும்பும், ஸ்ரீவாயுதேவரின் மதத்தின் ஸாரத்தினை, ஹரிதாஸ கூடத்தவர்களுக்கு மிகவும் பக்தி மரியாதைகளுடன் இதனை சொல்ல வேண்டும். இதனால், அந்த பக்த கூட்டத்திற்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாகிறது. அதிகமான கல்வியைக் கற்று வாதங்களில் ஈடுபட்டு, மிகவும் கஷ்டப்பட்டு போட்டி போடுபவர்களுக்கு இதனால் வெறுப்பு உண்டாவது சகஜமான விஷயமே.

***


Thursday, September 29, 2022

[பத்யம் #131] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #131] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் 131]

தா3ஸத3ர்பண நாமதி3ந்தி3து

ஸூஸுவந்த3தி3 முத3தி3 கருணிஸி

தா3 கு3ருகு1லதிலகரென்னனு தரலு பிரிதா3கி3 |

தே3தொ3ளகி3து3 பா4ஸவாயது

தோ3ஷலோபக3ளெணிஸத3லெ ஸம்

தோஷதி3ம் ஸ்வீகரிஸி ஹரிஸலி தா3 ப்ரேமிக3ளு ||131 

தாஸ குருகுலதிலகரு - தாஸரான முக்யபிராணர்; ஸூஸுவந்ததி - மிகவும் (மட்டற்ற); முததி - மகிழ்ச்சியுடன்; கருணிஸி - அருளி; என்னனு தரலு - என்னை ப்ரேரணை செய்ய; தாஸதர்பண - ஹரிதாஸ தர்பண; நாமதிந்திது - என்னும் பெயரில் இந்த கிருதி; தேஷதொளகிது - நாட்டில் இந்த கிருதி; பிரிதாகி - மிகவும் பெரியதாக; பாஸவாயது - பரவியது; தோஷலோபகளனு - இந்த கிருதியில் உள்ள குற்றம் குறைகளை; எணிஸதலெ - எண்ணாமல்; தாஸ ப்ரேமிகளு - ஹரிதாஸ ஸாகித்யத்தில் ஈடுபாடு கொண்டவர்கள்; ஸந்தோஷதிம் - மிகவும் மகிழ்ச்சியுடன்; ஸ்வீகரிஸி - இதனை ஏற்றுக் கொண்டு; ஹரிஸலி - பரவச் செய்யட்டும் (ஆதரவு அளிக்கட்டும்).

ஸ்ரீஹரிக்கு சமர்ப்பித்ததை அடுத்து, முக்யபிராணருக்கு இதனை சமர்ப்பித்து தனது தன்யதையை காட்டுகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர். 

தாஸரான முக்யபிராணர், மிகவும் மகிழ்ச்சியுடன் அருளி என்னை ப்ரேரணை செய்ய, ஹரிதாஸ தர்பண என்னும் பெயரில் இந்த கிருதி, மிகவும் பெரியதாக இந்த நாட்டில் பரவியது. இந்த கிருதியில் உள்ள குற்றம் குறைகளை எண்ணாமல், ஹரிதாஸ ஸாகித்யத்தில் ஈடுபாடு கொண்டவர்கள், மிகவும் மகிழ்ச்சியுடன் இதனை ஏற்றுக் கொண்டு இதற்கு ஆதரவு அளிக்கட்டும்.

***


Wednesday, September 28, 2022

[பத்யம் #130] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #130] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் 130]

அரித1வனு நானல்ல கவனவ

3ரெவ மதி மொத3லில்ல இனிதி1ரெ

3ரெத3வனு நானெந்து3 பேளுவ மாது ஸல்லுவுதெ3? |

நரஹரியு ப்ரேரிஸித3 தெரெதொ3ளு

விரசிஸிதெ3னீ பத்3யமாலெய

கருணிஸலு கு3ரு பி3ம்ப3 ஸ்ரீ தந்தெ3 முத்து3மோஹனனு ||130 

அரிதவனு நானல்ல - நான் எதையும் அறிந்தவன் அல்ல; கவனவ பரெவ மதி - இந்த பத்யங்களை எழுதும் அறிவு; மொதலில்ல - எனக்கு இல்லை; இனிதிரெ - இப்படியிருக்கையில்; பரெதவனு நானெந்து - இதை எழுதியவன் நான் என்று; பேளுவ மாது - நான் கூறினால்; ஸல்லுவுதெ - அது சரியாகுமா? நரஹரியு ப்ரேரிஸித தெரெதொளு - ஸ்ரீஹரியின் ஆணைப்படி; விரசிஸிதெனு - இயற்றினேன்; பத்யமாலெய - இந்த பத்யமாலாவை; குரு பிம்ப  - குரு அந்தர்கதனான; ஸ்ரீதந்தெ முத்துமோஹனனு - ஸ்ரீதந்தெ மோகன விட்டலன்; கருணிஸலு - அருளினான்; 

இந்த பத்யத்தை தன்னுடைய குர்வந்தர்கத ஸ்ரீஹரிக்கு சமர்ப்பிக்கிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர். 

நான் எதையும் அறிந்தவன் அல்ல. இந்த பத்யங்களை எழுதும் அறிவும் எனக்கு இல்லை. இப்படியிருக்கையில், இதை எழுதியவன் நான் என்று நான் கூறினால் அது சரியாகுமா?. ஸ்ரீஹரியின் ஆணைப்படி இயற்றினேன். இந்த பத்யமாலாவை குரு அந்தர்கதனான ஸ்ரீதந்தெ முத்துமோஹனனு அருளினான்.

****