[பத்யம் #119] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் 119]
மருத ஶாஸ்த்ரத3 மர்மவரியதெ3
ப3ரிதெ3 ஶப்3தா4ர்த்த2க3ள வாதி3ஸி
பி3ரது3 பா3வலிக3ளிகெ3 ப3டி3தா3டு3வுது3 கைபி3ட்1டு1 |
ஹரிய கு3ணகா3னத3லி சித்தவு
கரகி3 தன்னொளு தானு ஸுக2வனு
ஸுரிவ ஸர்வோத்க்ருஷ்ட ஸ்தி2தியனு பொந்து3 யத்னத3லி ||119
மருத ஷாஸ்த்ரத - மத்வ மதத்தின்; மர்மவரியதெ - மர்மங்களை (தத்வ ரகசியங்களை) அறியாமல்; பரிதெ - வெறும்; ஷப்தார்த்தகள - சொற்களை, அதன் அர்த்தங்களை; வாதிஸி - வாதித்து; பிரது பாவலிகளிகெ - விருது, பட்டங்களுக்கு; படுதாடுவுது - அடித்துக் கொள்வதை: கைபிட்டு - விட்டுவிட்டு; ஹரிய குணகானதலி - ஸ்ரீஹரியின் குணங்களைப் பாடுவதில்; சித்தவு கரகி - மனதை நிறுத்தி; தன்னொளு தானு - தனக்குள்ளேயே; ஸுகவனு ஸுரிவ - சுகத்தைப் பெறுவதான; ஸ்ர்வோத்க்ருஷ்ட - மிகச் சிறந்ததான; ஸ்திதியனு - நிலையை; யத்னதலி - மிகவும் முயற்சி செய்து; பொந்து - அடைவாயாக.
மத்வ மத ரகசியங்களை தொடர்ந்து மனனம் செய்ய வேண்டியதன் அவசியத்தை இங்கு விளக்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர்.
மத்வ மதத்தின் மர்மங்களை (தத்வ ரகசியங்களை) அறியாமல், வெறும் அதன் சொற்களை, அதன் அர்த்தங்களை, வாதித்து, விருது / பட்டங்களுக்கு அடித்துக் கொள்வதை விட்டுவிட்டு, ஸ்ரீஹரியின் குணங்களைப் பாடுவதில், மனதை நிறுத்தி, தனக்குள்ளேயே சுகத்தைப் பெறுவதான, மிகச் சிறந்ததான நிலையை மிகவும் முயற்சி செய்து அடைவாயாக.
இதே விஷயத்தை ஸ்ரீஜகன்னாததாஸர், ஸ்வாச சந்தியில் இவ்வாறு கூறியிருக்கிறார் என்பதை பார்க்கிறோம்.
பெ3ளகி3த்3ஹூஜியு நோள்பரிகெ3 த2ள
த2ளிஸுதலி கங்கொ3ளிஸுவந்த3தி3
தொளெது3 தே3ஹவ நாம முத்3ரெக3ளிந்த3லங்கரிஸி |
ஒலிஸி நித்ய குதர்க்க யுக்திக3
ளலவ போ4த4ர ஷாஸ்த்ர மர்மவ
திளியதி3ஹ நர ப3ரிதெ3 இத3ரொளு ஷங்கிஸித3ரேனு ||(15-22)
நன்றாக கழுவிய சிறிய கழுத்துள்ள பாத்திரம் (சொம்பு) அதை பார்ப்பவர்களுக்கு பளபள என்று ஒளிர்வதைப் போல சரீரத்தை சுத்தம் செய்து 12 நாமங்கள், முத்ரைகளால் அதனை அலங்கரித்து ஸ்ருதி ஸ்ம்ருதிகளை பின்பற்றாமல் வெறும் தந்திரங்களால் ஊகிக்கும் கு-தர்க்கத்தை படித்து ஸ்ரீ பூர்ணப்ரக்ஞரின் (ஸ்ரீமன் மத்வாசார்யரின்) சர்வமூல கிரந்தங்களின் உள் அர்த்தத்தை அறியாத மனிதன் பிரயோஜனம் இல்லாமல் இந்த கிரந்தத்தில் சந்தேகப்பட்டால் என்ன பிரயோஜனம்?
****
No comments:
Post a Comment