Sunday, September 11, 2022

[பத்யம் #114] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #114] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[பத்யம் 114]

நித்ய ஶௌ ஸ்னான ஜபதப

ஹொத்து மீரதெ3 பா4னுக3ர்க்4யவ

நித்து ஆஹாராதி3 நித்4ரெகெ3 தி3னவ மிதகொ3ளிஸி |

அர்த்தி2யிந்த3லி மிக்க காலவ

வ்யர்த்த2 லௌகிக வார்த்தெகெ3ளஸதெ3

மத்தெ அவலோகிபுது3 தா3ஸர பத3 ஸுளாதி33ளு ||114 

நித்ய ஷௌச ஸ்னான ஜபதப - நித்ய கர்மானுஷ்டானங்களான ஸ்னான, ஜபதப ஆகியவற்றை செய்து; ஹொத்து மீரதெ - காலம் தவறாமல்; பானுகர்க்யவனித்து - சூரியனுக்கு அர்க்யத்தைக் கொடுத்து; ஆஹாராதி நித்ரெகெ - சாப்பாடு, தூக்கம் ஆகியவற்றிற்கு; தினவ மிதகொளிஸி - இவ்வளவு நேரம் என்று ஒதுக்கி வைத்துவிட்டு; மிக்க காலவ - மிச்சம் இருக்கும் காலங்களில்; வ்யர்த்த லௌகிக வார்த்தெகெளஸதெ - வீணான லௌகிக அரட்டைகளில் ஈடுபடாமல்; அர்த்தியிந்தலி - மிகவும் பக்தி மரியாதையுடன்; தாஸர - ஹரிதாஸர்களின்; பத ஸுளாதிகளு - பத ஸுளாதிகளை; மத்தெ அவலோகிபுது - திரும்பத் திரும்ப படிக்கவேண்டும்; 

நாள் முழுக்க செய்ய அனுசந்தானத்தினை ஸ்ரீதாஸர் இவ்வாறு விளக்குகிறார். 

நித்ய கர்மானுஷ்டானங்களான ஸ்னான, ஜபதப ஆகியவற்றை செய்து, காலம் தவறாமல், சூரியனுக்கு அர்க்யம் கொடுத்து, சாப்பாடு தூக்கம் ஆகியவற்றிற்கு இவ்வளவு நேரம் என்று ஒதுக்கி வைத்து, மிச்சம் இருக்கும் காலங்களில் வீணான லௌகிக அரட்டைகளில் ஈடுபடாமல் மிகவும் பக்தி மரியாதையுடன், ஹரிதாஸர்களின் பத ஸுளாதிகளை திரும்பத் திரும்ப படிக்க வேண்டும். 

ஹரிகதாம்ருதஸாரத்தில் இந்த பத்யம் இவ்வாறாக விளக்கப்பட்டுள்ளது. 

ஒரடு பு3த்தி4 பி3ட்டு லௌகிக

ஹரடெக3ளனீடா3டி3 காஞ்சன

பரட லோஷ்டாதி33ளு ஸமவெந்த3ரிது3 நித்யத3லி |

புருட vர்ப்பா4ண்டோ33ரனு

த்புருட நெந்தெ3னிஸெயெல்லரொளகி3

த்துருடு கர்மவ மாள்பனெந்த3டிக3டிகெ3 நெனெயுதிரு ||(13-30) 

ஸ்ரீஹரி இங்கேயே இருக்கிறான். அங்கே என்ன இருக்கிறது?, பிரதிமையே ஸ்ரீஹரி, இந்த கடவுளே கடவுள் என்னும்படியான சிறுமையான (தவறான) புத்தியை விட்டு, லௌகிக அரட்டைகளில் காலத்தைக் கழிக்காமல், தங்கம் வேண்டும், வெள்ளி வேண்டும் என்று பேராசைப்படாமல் இவை அனைத்தும் தற்காலிகமானவை என்று அறிந்து, உலோகம், தேங்காய் ஓடு, தங்கம் இவை அனைத்தும் சமமே என்று அறிந்து, பரமாத்மனை வேண்டு. பிரம்மாண்டத்தையே தன் வயிற்றில் வைத்துக்கொண்டிருக்கும் பரமாத்மன் சர்வோத்தமன். சர்வபிராணிகளிலும் இருந்து நீசோச்ச பாவத்தினால், அனைத்து கர்மங்களையும் செய்விக்கிறான் என்று நினைத்து எப்போதும் பரமாத்மனை நினைத்துக் கொண்டிரு என்பது கருத்து

***


No comments:

Post a Comment