Saturday, September 17, 2022

[பத்யம் #120] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #120] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[பத்யம் 120]

ஸுஸம்யஞான ஸாத4

பா4ஸுவந்த3தி3 தோரி பேளலு

ஏஸு காலக1ஸாத்4 ஸாத்4யவு ஹரி கு3ரு க்ருபெய |

லே பொந்தி33 மனுஜ மாத்ரகெ3

தோ3 ஸம் 3ம்ப4 மானித1

கே3ஸு பேளிதொ3டே3னு தோரது3 தோ3ஷவித3ரல்லி ||120 

ஸுஸம்யஞான - இப்படியான யதார்த்த ஞானம்; ஸாதன - ஸாதன மார்க்கமானது; பாஸுவந்ததி - மிகவும் தெளிவாக; தோரி பேளலு - விளக்குவதற்கு; ஏஸு காலகு - எவ்வளவு காலம் ஆனாலும்; அஸாத்ய - முடியாததாகும்; ஹரி குரு க்ருபெய - ஸ்ரீஹரி குருகளின் அருளை; லேஷ - சிறிதாவது; பொந்தித - அடைந்திருக்கும்; மனுஜ மாத்ரகெ - மனிதர்களுக்கு மட்டுமே; ஸாத்யவு - இது சாத்தியம் ஆகும்; தோஷ ஸம்ஷய - சந்தேகத்துடனான ஞானத்தைக் கொண்ட; டம்ப மானிதகெ - கர்வம் கொண்ட மனிதர்களுக்கு; பேளிதொடேனு தோரது - எவ்வளவு கூறினாலும் தெரியாது; தோஷவிதரல்லி - அவர்களில் தோஷம் இருக்கிறது. 

இத்தகைய நிலையை அடைய ஸ்ரீஹரி குருகளின் அருள் கண்டிப்பாக தேவை என்று இங்கு சொல்கிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர். 

இப்படியான யதார்த்த ஞானத்தை, அதற்கான ஸாதன மார்க்கத்தை மிகவும் தெளிவாக விளக்குவதற்கு எவ்வளவு காலம் ஆனாலும் அது முடியாததாகும். ஸ்ரீஹரி குருகளின் அருள் சிறிதாவது பெற்றிருக்கும் மனிதருக்கு மட்டுமே அது சாத்தியம் ஆகும். சந்தேகத்துடனான ஞானத்தைக் கொண்ட, கர்வம் கொண்ட மனிதர்களுக்கு, இது எவ்வளவு கூறினாலும் தெரியாது. அவர்களில் தோஷம் இருக்கிறது.

***


No comments:

Post a Comment