Thursday, September 22, 2022

[பத்யம் #125] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #125] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் 125]

நித்ய ஸ்னானவு மடி3யத3ல்லவெ

உத்தமாம்ப3 மடி3யத3ல்லவெ

மத்தெ கோ3பீசெந்த3னத3 லேபனவு மடி3யல்லெ |

ஹ்ருத்ஸ்த ஹரிக3வதா3னவெந்த3ரி

து3த்தமன நுடி3 நுடி3கெ3 நெனெயுவ

ஸத்வபா4வனெ மடி3யு 33பி3டி3 வ்யர்த்த2 மடி3கா3கி3 ||125 

நித்ய ஸ்னானவு மடியதல்லவெ - நித்ய ஸ்னானம் செய்தால், அது மடியல்ல; உத்தமாம்பர மடியதல்லவெ - மிகச் சிறந்ததான ஆடையை உடுத்தினால் அது மடியல்ல; மத்தெ கோபீசெந்தனத - பிறகு, கோபிசந்தனத்தினை; லேபனவு - பூசிக்கொண்டால்; மடியல்ல - அதுவும் மடியல்ல; ஹ்ருத்ஸ்த - இதயத்தில் இருப்பவனான; ஹரிகெ - ஸ்ரீஹரிக்கு; அவதான - அவை அனைத்தும் அலங்காரங்கள்; எந்தரிது - என்று அறிந்து; உத்தமன - ஸர்வோத்தமனான ஸ்ரீஹரியை; நுடி நுடிகெ - ஒவ்வொரு வார்த்தையிலும்; நெனெயுவ - நினைக்கும்; ஸத்வபாவனெ - சிந்தனையே; மடியு - மடி ஆகும்; மடிகாகி - மடிக்காக; கடபிடி வ்யர்த்த - கெடுபிடி தேவையற்றது. 

முந்தைய பத்யத்தின் தொடர்ச்சியாகவே இந்த பத்யமும் இருக்கிறது. 

நித்ய ஸ்னானம் செய்தால், அது மடியல்ல. மிகச் சிறந்ததான ஆடையை உடுத்தினால் அது மடியல்ல. பிறகு கோபிசந்தனத்தினை பூசிக் கொண்டால், அதுவும் மடியல்ல. இதயத்தில் இருப்பவனான ஸ்ரீஹரிக்கு அவை அனைத்தும் அலங்காரங்களே ஆகும் என்று அறிந்து, ஸர்வோத்தமனான ஸ்ரீஹரியை ஒவ்வொரு வார்த்தையிலும் நினைக்கும் சிந்தனையே மடி ஆகும். இத்தகைய மடிக்கு எவ்வித கெடுபிடிகளும் தேவையில்லை.

****


No comments:

Post a Comment