Tuesday, September 6, 2022

[பத்யம் #110] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #110] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் 110]

உத்தமத3 நரதே3 ஸாத4

கி1த்திரலு கொப்3பி3ஸதெ3 காயவ

க்லிப்தத3லி போஷி2புது3 ஸாத்விக ஹரி நிவேத3னத3 |

ஹத்து மூர்மேலேர3டு துத்தனு

தத்திகா3த்ரதி3 மாடி3 பு3ஞ்சிஸு

துத்து துத்திகெ3 கர்த ஸ்ரீகோ3விந்த3னனு ஸ்மரிஸி ||110 

உத்தமத நரதேஹ - உத்தமமான இந்த நரதேகம்; ஸாதன கித்திரலு - ஸாதனை செய்வதற்காக வந்திருக்க; காயவ கொப்பிஸதெ - இந்த தேகத்தை வீணாக பயன்படுத்தாமல்; க்லிப்ததலி போஷிபுது - விதி / விதிவிலக்குகளின்படி காக்க வேண்டும்; ஸாத்விக - ஸாத்விகமான; ஹரி நிவேதனத - ஸ்ரீஹரிக்கு நிவேதனம் செய்யப்பட்ட; ஹத்து மூர்மேலேரடு - 32; தத்திகாத்ரதி - முட்டை அளவு உள்ள; துத்தனு - கைப்பிடிகளை; கர்த - கர்த்ருவான; ஸ்ரீகோவிந்தனனு - ஸ்ரீகோவிந்தனை; ஸ்மரிஸி - நினைத்தவாறு; புஞ்சிஸு - உண்பாயாக. 

ஸாதன ஷரீரத்தை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீதாஸர் இங்கு விளக்குகிறார். 

உத்தமமான இந்த நரதேகம், ஸாதனை செய்வதற்காக வந்திருக்கையில், இந்த தேகத்தை வீணாக பயன்படுத்தாமல், விதி விதிவிலக்குகளின்படி காக்க வேண்டும். ஸாத்விகமான, ஸ்ரீஹரிக்கு நிவேதனம் செய்யப்பட்ட 32 முட்டை அளவு உள்ள கைப்பிடிகளை, கர்த்ருவான ஸ்ரீகோவிந்தனை நினைத்தவாறு உண்ண வேண்டும். 

இதையே ஸ்ரீஜகன்னாததாஸர், தனது கிருதியானபலவிது பாளுதுதக்கெவில் இவ்வாறு கூறியிருக்கிறார். 

ஹ்ருதயதி ரூபவு வதனதி நாமவு உதரதி நைவேத்யவு ஷிரதி

பதஜல நிர்மால்யவனெ தரிஸி கோவிதர ஸதனதலி ஹெக்கதவ காயுவுதே

-- பலவிது பாள்துதக்கெ 

எப்போதும் நம் இதயத்தில் பகவந்தன் இருக்கிறான் என்னும் அனுசந்தானம் செய்தவாறு; நம் வாயில் பகவந்தனின் நாமத்தை எப்போதும் ஜெபித்தவாறு; வயிற்றில் நைவேத்தியம் செய்யப்பட்ட உணவுகளை மட்டுமே உண்டு; தலையில் அவனது நிர்மால்யங்களை தரித்து, அறிஞர்களின் வாயிற்கதவுகளில் நின்று அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருப்பதே, இந்த பிறவி எடுத்ததற்கான பலன்.

***


No comments:

Post a Comment