Saturday, September 3, 2022

[பத்யம் #107] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #107] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் 107]

ஶிஷ்2டஜன ஒள த்3ருஷ்டியிம் ஹ்ருத3

யஷ்2டகமலதி3 இஷ்டபி3ம்ப3

ஸ்பஷ்2 மூருதி தி3ட்டிஸுத பூஜிபரு கு3ட்டினலி |

எஷ்2டு பா3ஹ்யதொ3ளஷ்2டு மனத3லி

ஸ்ருஷ்2டிஸுத ஸந்துஷ்2டனாகெ3ம்

திஷ்2 ப்ரார்த்த2னெ ஸல்லிஸி துஷ்2டியபட்டு1 ஸுகி2ஸுவரு ||107 

சிஷ்டஜன - விஷயங்களை அறிந்தவர்கள்; ஒள த்ருஷ்டியிம் - அகப் பார்வையில்; ஹ்ருதயத - இதயத்தின்; அஷ்டகமலதி - அஷ்ட தள கமலத்தில் இருப்பவனான; இஷ்ட பிம்பன - இஷ்ட பிம்பமூர்த்தியின்; ஸ்பஷ்ட மூருதி - தெளிவான தரிசனத்தை; திட்டிஸுத - பார்த்தவாறு; குட்டினலி - ரகசியமாக; பூஜிபரு - பூஜிப்பார்கள்; எஷ்டு பாஹ்யதொளு - எவ்வளவு (எப்படி) வெளியில் (தெரிகிறதோ); அஷ்டு மனதலி - அவ்வளவே ரூபங்களை மனதில்; ஸ்ருஷ்டிஸுத - உருவாக்கியவாறு; ஸந்துஷ்டனாகி - மகிழ்ந்து; எந்திஷ்ட - என இதையே பிரார்த்தனை; ஸல்லிஸி - செய்து; துஷ்டியபட்டு - மகிழ்ந்து; ஸுகிஸுவரு - சுகமாக இருப்பார்கள். 

மலகி3 பரமாத3ரதி3 பாட3லு

குளிது கேளுவ குளிது பாட3லு

நிலுவ நிந்தரெ நலிவ நலித3ரெ ஒலிவெ நிமகெ3ம்ப3 | 

படுத்தோ, அமர்ந்தோ, நின்றோ, ஆடியோ பகவந்தனை வேண்டினால், நான் மகிழ்ந்து உங்களுக்கு தரிசனம் கொடுக்கிறேன் என்று பகவந்தனே கூறியிருப்பதாக, ஹரிகதாம்ருதஸாரத்தில் ஸ்ரீஜகன்னாததாஸர் கூறுகிறார்.

***


No comments:

Post a Comment