Monday, September 19, 2022

[பத்யம் #122] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #122] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[பத்யம் 122]

மடி3யு மெய்லிகெ3 எம்ப3 விதி4யிம்

ஸட33ரத3 ஆசரணெ தோர்ப்பனு

ஒட3லொளட3கி3ஸி ஹொலெயரந்திருதிர்ப்ப ஷட்3ரிபுவ |

ஒடெ3 கிருஷ்ணன நெனெயத3லெ பி3ரு

நுடி3 மெய்லிகெ3 நுடி3 நாலிகெ3

கடு3கெடி3 மொத3லனெய மெய்லிகெ3 து3க்க2வித3 2 ||122 

ஒடெய கிருஷ்ணன நெனெயதலெ - தலைவனான ஸ்ரீகிருஷ்ணனை நினைக்காமல்; மடியு மெய்லிகெ - மடி, விழுப்பு; எம்ப விதியிம் - என்னும் விதிகளின்படி; ஸடகரத - மிக்க மகிழ்ச்சியுடன்; ஆசரணெ - ஆசார விதிகளை; தோர்ப்பனு - செய்பவன்; ஷட்ரிபுவ - அரிஷட்வர்க்கங்களை; ஒடலொளடகிஸி - தனது உடலில் அடக்கி வைத்துக் கொண்டு; ஹொலெயரந்திருதிர்ப்ப - கீழானவனைப் போல இருக்கிறான்; மொதலனெய மெய்லிகெ - (இதுவெ) முதலாம் விழுப்பு ஆகும்; கடுகெடிப - மிக கடுமையான (பிறரை கெடுப்பதான); பிரு நுடிய - கெட்ட வார்த்தைகளை; நுடிவ நாலிகெ - பேச்சும் நாக்கானது; மெய்லிகெ - விழுப்பு ஆகும்; துக்கவிதர பல - இதன் பலனாக துக்கமே கிடைக்கிறது. 

ஸ்ரீகிருஷ்ணனை எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பதே மடி என்பதான உயரிய கருத்தினை இங்கு ஸ்ரீதாஸர் கூறுகிறார். 

தலைவனான ஸ்ரீகிருஷ்ணனை நினைக்காமல், மடி, விழுப்பு என்னும் விதிகளின்படி மிக்க மகிழ்ச்சியுடன் ஆசார விதிகளை செய்பவன், அரிஷட்வர்க்கங்களை தனது உடலில் அடக்கி வைத்துக்கொண்டு, கீழானவனைப் போல இருக்கிறான். இதுவே முதலாம் (கடுமையான) விழுப்பு ஆகும். பிறரை கெடுப்பதான மிகக் கடுமையான கெட்ட வார்த்தைகளை பேச்சும் நாக்கானது விழுப்பு ஆகும். இதன் பலன் துக்கமே ஆகும். 

பட்டெய நீரொளகித்தி ஒணகிஸி

உட்டு கொண்டரெ அது மடியில்ல

ஹொட்டெயொளகின காம க்ரோத மத மத்ஸர

பிட்டு நடெதரெ அது மடியு ||

என்று ஸ்ரீபுரந்தரதாஸர் மற்றும் பிறகு ஸ்ரீவிஜயதாஸர்களே முதலான பல ஹரிதாஸர்கள் பாடியுள்ள மடி பற்றிய விஷயங்களையே இந்த பத்யத்தில் ஸ்ரீதாஸர் விளக்கியிருக்கிறார்.

***



No comments:

Post a Comment