Tuesday, September 13, 2022

[பத்யம் #116] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #116] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[பத்யம் 116]

தே3 தே3வோத்தமனு ஸ்ரீஹரி

ஜீவரொளக3திஶ்ரேஷ்ட வாயுவு

பா4வஜாரியு வைஷ்ணவோத்தமனெந்து3 கரெஸுவனு |

ஸேவகரு மிக்காத தி3விஜரு

வித4தி3 வர தாரதம்யவ

பா4வதி3ந்தரிதைது3 பே43 நிருத ஸாதி4புது3 ||116 

ஸ்ரீஹரி - ஸ்ரீஹரியானவர்; தேவ தேவோத்தமனு - ஸர்வோத்தமன் ஆகிறான்; வாயுவு - ஸ்ரீவாயுதேவர்; ஜீவரொளகதிஸ்ரேஷ்ட - ஜீவோத்தமர் ஆகிறார்; பாவஜாரி - மன்மதனை எரித்த ருத்ரர்; வைஷ்ணவோத்தமனெந்து - வைஷ்ணவர்களில் சிறந்தவர் என்று; கரெஸுவனு - அழைக்கப்படுகிறார்; மிக்காத திவிஜரு - மற்ற அனைத்து தேவதைகளும்; ஸேவகரு - (ஸ்ரீஹரியின்) சேவகர்களே; விததி - இப்படியாக; வர தாரதம்யவ  - சிறந்ததான தாரதம்யத்தினை; பாவதிந்தரிது - மிகுந்த பக்தியுடன் அறிந்து; ஐது பேதவ - ஐந்து பேதங்களை;  நிருத - எப்போதும்; ஸாதிபுது - அறிய வேண்டும். 

மத்வ சித்தாந்தத்தின் முக்கிய கோட்பாடுகளான தாரதம்யத்தினை இங்கு சுருக்கமாக சொல்கிறார் ஸ்ரீதாஸர். 

ஸ்ரீஹரியானவர், ஸர்வோத்தமன் ஆகிறான். ஸ்ரீவாயுதேவர் ஜீவோத்தமர் ஆகிறார். மன்மதனை எரித்த ருத்ரர், வைஷ்ணவோத்தமன் ஆகிறார். மற்ற அனைத்து தேவதைகளும் ஸ்ரீஹரியின் ஸேவகர்களே. இப்படியாக சிறந்ததான தாரதம்யத்தினை மிகுந்த பக்தியுடன் அறிந்து, பஞ்ச பேதங்களை எப்போதும் அறிய வேண்டும். 

இதையே ஸ்ரீஜகன்னாததாஸர் ஹரிகதாம்ருதஸாரத்தில் ஒரு பத்யத்தில் இவ்வாறு கூறியிருக்கிறார். 

தேவ தைத்யர தாரதம்யவ

நீவிததி திளிதெல்லரொளு

க்ஷீவரனெ சர்வோத்தமனு எந்தரிது நித்யதலி |

சேவிசுவ பக்தரி கொலிது சுக

வீவ சர்வத்ரதலி சுகமய

ஸ்ரீவிரிஞ்ச்யாதி வினுத ஜகன்னாதவிட்டலனு ||(29-16)

***



No comments:

Post a Comment