[பத்யம் #128] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் 128]
ஶப்3த3மாத்ர ஞானவில்லதெ3
ஶுத்3த4பா4வதி3 நுடி3த3 நுடி3க3ளு
மத்3 கு3ருக3ளந்த:கரணபூ1ரித கருணப3ல ப2லவு |
உத்3த4விஸிப3ஹ தரணி அருணன
உத்3த4ரிஸி குள்ளிரிஸதி3ர்தொ3டெ
ஒத்3து3 திமிரவ பெ3ளகுமாட3லு ஶக்த தானஹனெ ||128
தான் இதுவரை கூறியது அனைத்தும் தம் குருகளின் / ஸ்ரீஹரியின் கருணையே ஆகும் என்பதை இங்கு சொல்லி பக்தியுடன் வணங்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர்.
ஷப்தமாத்ர - வெறும் சொற்களை மட்டுமே நான் கூறினேன்; ஞானவில்லதெ - அதை சொல்வதற்கான ஞானமும் எனக்கு இல்லை; ஷுத்தபாவதி - மனதில் சுத்தமான பக்தி பாவனைகளுடன்; நுடித நுடிகளு - நான் இங்கு கூறிய சொற்கள் (பத்யங்கள்); மத் குருகளந்த:கரணபூரித - நம்முடைய குருகளின் அந்தர்யாமியான ஸ்ரீஹரியின்; கருண பல பலவு - கருணையின் பலமே / அதனுடைய பலனே ஆகும்; உத்தரிஸி குள்ளிரிஸதிர்தோடெ - அத்தகைய பாரதி ரமண முக்யபிராணாந்தர்கதனான ஸ்ரீஹரி, நம்முடைய மனதில் அமர்ந்து, நமக்கு அருள்வது (எப்படி இருக்கிறது என்றால்); உத்தவிஸிபஹ - ஒளிர்ந்து வருவதான; தரணி - சூரியன்; அருணன - கிரணங்களானது; திமிரவ - இருட்டினை; ஒத்து - அடக்கி; பெளகுமாடலு - வெளிச்சம் தருவதைப் போல; ஷக்த தானஹனெ - ஸ்ரீஹரியானவன் இருக்கிறான்.
நம் மனதில் ஸ்ரீஹரியானவர் எப்போதும் இருந்து நமக்கு அருள்கிறார் என்பதை ஹரிகதாம்ருதஸாரத்தில் பல பத்யங்களில் ஸ்ரீஜகன்னாததாஸர் விளக்கியிருக்கிறார் என்பதை அறிகிறோம்.
***
No comments:
Post a Comment