[பத்யம் #117] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் 117]
க4ளிகெ3 பி3ட3த3லெ ஹம்ஸமந்த்ரவ
வளகெ3 பா4ரதிபதியு ஜபிஸுத
ஸலெ ஸுயோக்3யகெ3 க3திய ஸல்லிப ஜபத3 நியமவனு |
திளியுதனுஸந்தா4ன பூர்வக
ஸுலப4தி3ந்த3லி ப2லவ க3ளிஸதெ3
ச2லதி3 மணிக3ள ப3ரிதெ3 பெ3ரளலி பிடி3து3 ப2லவேனு ||117
பாரதிபதியு - பாரதிரமணனான முக்யபிராணர்; களிகெ பிடதலெ - ஒரு நொடிகூட விடாமல்; வளகெ - நமக்குள்; ஹம்ஸமந்த்ரவ ஜபிஸுத - ஹம்ஸ மந்திரத்தை ஜெபித்தவாறு; ஸுயோக்யகெ - ஜீவர்களில் தக்க யோக்யதையைக் கொண்டவர்களுக்கு; ஸலெ - சிறந்ததான; கதிய - கதியை; ஸல்லிப - கொடுக்கிறான். நியமவனு - இப்படியான நியமங்களை; திளியுத - அறிந்தவாறு; அனுஸந்தான பூர்வக - மேற்கண்ட அனுசந்தானத்துடன்; ஸுலபதிந்தலி - மிகவும் சுலபமாக; பலவ களிஸதெ - தக்க பலன்களைப் பெறாமல்; சலதி - வேகமாக; மணிகள - துளஸி மணிகள; பரிதெ - வெறுமனே; பெரளலி பிடிது - விரல்களில் பிடித்திருந்தால்; பலவேனு - அதனால் என்ன பலன்?
நாம் முக்யபிராணரை வணங்க வேண்டியதன் அவசியத்தை (வாயு ஜீவோத்தமத்வ என்னும் சிந்தனையின் அவசியத்தை) மிகச் சுருக்கமாக இந்த பத்யத்தில் விளக்கியிருக்கிறார் ஸ்ரீதாஸர்.
பாரதிரமணனான முக்யபிராணர், ஒரு நொடிகூட விடாமல் நமக்குள் ஹம்ஸ மந்திரத்தை ஜெபித்தவாறு, ஜீவர்களில் தக்க யோக்யதையைக் கொண்டவர்களுக்கு சிறந்ததான கதியை கொடுக்கிறான். இப்படியான நியமங்களை அறிந்தவாறு, மேற்கண்ட அனுசந்தானத்துடன் மிகவும் சுலபமாக தக்க பலன்களைப் பெறாமல், வேகமாக துளஸி மணிகளை வெறும் விரல்களில் பிடித்திருந்தால் அதனால் என்ன பலன்?.
ஹம்ஸ மந்திரம் ஜெபிக்கும் வாயுதேவரைப் பற்றி ஹரிகதாம்ருதஸாரத்தில் பல பத்யங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றினை மட்டும் பார்ப்போம்.
தாஸிகொ3ம்பை3னூரு ஷ்வாசோ
ஸ்வாஸக3ள நடெ3ஸுதலி சேதன
ராஷியொளு ஹக3லிருளு ஜாக்3ருதனாகி3 நித்யத3லி |
ஈ ஸுமனஸோத்தம்ஸ லேஷா
யாஸவில்லதெ3 போஷிஸுத மூ
லேஷனங்க்3ரி ஸரோஜ மூலத3லிப்ப காணிஸதெ3 ||2
ஸ்ரீவாயுதேவர், அனைத்து ஜீவராசிகளின் இதய கமலத்தில் இருக்கும் மூலேஷ நாமக ஸ்ரீபரமாத்மனின் பாத கமலத்தில் இருந்துகொண்டு, தினமும் ஒரு நாழிகைக்கு 360 ஸ்வாசங்களையும், ஒரு மணி நேரத்திற்கு 900 ஸ்வாசங்களையும் (1 மணி = 2.5 நாழிகை; 360*2 + 180 =
900) ஸ்வாச உஸ்வாஸ ரூபமான ஹம்ஸ மந்திர ஜபத்தை செய்து செய்வித்து, தான் கொஞ்சம்கூட சோர்வு இல்லாமல், இரவும் பகலும், விழிப்புடன் இருந்து, வேறு யாருக்கும் காட்டிக்கொள்ளாமல், ஜீவராசிகளுக்கு அருள்கிறார்.
***
No comments:
Post a Comment