[பத்யம் #126] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் 126]
ஹுட்டு மெய்லிகெ3 ஸாவு மெய்லிகெ3
நட்ட நடு3விலி இத3ர கொ3ட3விய
பி3ட்டவனெ மடி3வந்த கிருஷ்ணன ஸ்மரணெக3தி4காரி |
விட்டலன நாமவனு வத3னதொ3
ளிட்டு மரெயதெ3 நிஷ்டெயிரலதெ3
அட்டஹாஸத3 மடி3யு மெய்லிகெ3 மாதெ1 மெய்லிகெ3யு ||126
ஹுட்டு மெய்லிகெ - பிறப்பும் விழுப்பு; ஸாவு மெய்லிகெ - இறப்பும் விழுப்பு; நட்ட நடுவிலி - நடுவில் இருக்கும் இந்த வாழ்க்கையில்; இதர - இந்த விழுப்பினைப் பற்றிய; கொடவிய பிட்டவனே - கவலையை விட்டவனே; மடிவந்த - மடிவந்தன் ஆகிறான்; அவனே, கிருஷ்ணன - ஸ்ரீகிருஷ்ணனின்; ஸ்மரணெகதிகாரி - ஸ்மரணைக்கு அதிகாரம் பெற்றவன்; விட்டலன நாமவனு - ஸ்ரீவிட்டலனின் பெயரை; வதனதொளிட்டு - எப்போதும் வதனத்தில் வைத்து; மரெயதெ - மறக்காமல்; நிஷ்டெயிரலு - பக்தி இருந்தால்; அதே - அதுவே; அட்டஹாஸத மடியு - சரியான மடியாகும்; மெய்லிகெ மாதெ மெய்லிகெயு - விழுப்பு என்று சொல்வதே விழுப்பாகும்;
மடி விழுப்புகளின் விளக்கங்கள் மேலும் தொடர்கின்றன.
பிறப்பும் விழுப்பு; இறப்பும் விழுப்பு; நடுவில் இருக்கும் இந்த வாழ்க்கையில் இந்த விழுப்பினைப் பற்றிய கவலையை விட்டவனே, மடிவந்தன் ஆகிறான். அவனே ஸ்ரீகிருஷ்ணனின் ஸ்மரணைக்கு அதிகாரம் பெற்றவன். ஸ்ரீவிட்டலனின் பெயரை எப்போதும் வதனத்தில் வைத்து மறக்காமல் பக்தியைக் கொண்டிருந்தால், அதுவே சரியான மடியாகும்.
***
No comments:
Post a Comment