Sunday, September 25, 2022

[பத்யம் #127] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #127] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் 127]

அருஹிதெ3னு ஹரிதா3 பா4வத3

பரிய ஹிரியரு தோரித3ந்த3தி3

கரெகரெய 4வனீகி3 பொரெவுத3கிது3வெ ஹெத்3தா4ரி |

3ரிதெ3 பா3ஹ்யாசார 2டபட

கெரகி3 மருளாக33லெ ஸாத4

வரிது1 கௌ3ப்யதி3 ஹருஷபடு3தலி நெலெயகாணுவுது3 ||127 

ஹிரியரு தோரிதந்ததி - பெரியவர்கள் கூறியதைப் போல; ஹரிதாஸ பாவத பரிய - ஹரிதாஸ ஸாகித்யத்தின் வழியை; அருஹிதெனு - கூறினேன்; கரெகரெய - துன்பமான; பவனீகி - சம்சார சுழற்சி நீங்கி; பொரெவுதகெ - காப்பதற்கு; இதுவே ஹெத்தாரி - இதுவே மிகச்சிறந்த வழி; பரிதெ - (இதை விட்டுவிட்டு) வெறும்; பாஹ்யாசார - புற செயல்களை; படபட கெரகி மருளாகதலெ - திரும்பத்திரும்ப செய்து, அதில் மயங்காமல்; ஸாதனவரிது - தங்களின் ஸாதனைகளை அறிந்து; கௌப்யதி - ரகசியமாக; ஹருஷபடுதலி - மகிழ்ந்து; நெலெய காணுவுது - தன் இலக்கினை அடைய வேண்டும். 

இந்த தீர்க்க கிருதியை முடித்தவாறு, ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் நம் இலக்கினை (முக்தியை) அடையும் வழியினை இங்கு சொல்கிறார். 

பெரியவர்கள் கூறியதைப் போல, ஹரிதாஸ ஸாகித்யத்தின் வழியை கூறினேன். துன்பமான சம்சார சுழற்சி நீங்குவதற்கு இதுவே மிகச்சிறந்த வழியாகும். இதை விட்டுவிட்டு, வெறும் புறச் செயல்களை திரும்பத்திரும்ப செய்து, அதில் மயங்கிவிடாமல், தங்களின் ஸாதனைகளை அறிந்து, ரகசியமாக மகிழ்ந்து தன் இலக்கான முக்தியை அடைய வேண்டும்.

***


No comments:

Post a Comment