Friday, September 30, 2022

[பத்யம் #132] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #132] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் 132]

ஸ்ரீ ஸமீரர மதத3 ஸாரவ

வாஸுதே3வன ஒலுமெ 4யஸுவ

தா3ஸகூட1ஸ்த2ரிகெ3 பேள்து3து3 வினய பா4வத3லி |

தோ1ஷதோர்புது3 4க்தவ்ருந்த3கெ1

ராஶி வித்3யவ கலிது வாத3தி3

க்லேபடு3தலி காது3வரிகி3து3 பே3ஸரவு ஸஹஜ ||132 

வாஸுதேவன - ஸ்ரீவாஸுதேவனின்; ஒலுமெ பயஸுவ - தரிசனத்தை (அருளை) விரும்பும்; ஸ்ரீஸமீரர மதத ஸாரவ - ஸ்ரீவாயுதேவரின் மதத்தின் ஸாரத்தை; தாஸகூடஸ்தரிகெ - ஹரிதாஸ கூடத்தவர்களுக்கு; வினய பாவதலி - மிகவும் பக்தி மரியாதையுடன்; பேள்துது - இதனை சொல்ல வேண்டும்; பக்தவ்ருந்தகெ - அந்த பக்த கூட்டத்திற்கு; தோஷ தோர்புது - மிகுந்த மகிழ்ச்சி உண்டாகிறது; ராஷி வித்யவ கலிது - அதிகமான கல்வியைக் கற்று; வாததி - வாதத்தில்; க்லேஷபடுதலி - மிகவும் கஷ்டப்பட்டு; காதுவரிகிது - போட்டி போடுபவர்களுக்கு; பேஸரவு - வெறுப்பு (உண்டாவது); ஸஹஜ - சகஜமான விஷயமே. 

இந்த ஹரிதாஸ தர்பண கிருதியை அனைத்து ஸ்ரீஹரி பக்தர்களுக்கும் எடுத்து சொல்ல வேண்டும். அதனால், அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியே உண்டாகும் என்கிறார் ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர். 

ஸ்ரீவாஸுதேவனின் தரிசனத்தை (அருளை) விரும்பும், ஸ்ரீவாயுதேவரின் மதத்தின் ஸாரத்தினை, ஹரிதாஸ கூடத்தவர்களுக்கு மிகவும் பக்தி மரியாதைகளுடன் இதனை சொல்ல வேண்டும். இதனால், அந்த பக்த கூட்டத்திற்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாகிறது. அதிகமான கல்வியைக் கற்று வாதங்களில் ஈடுபட்டு, மிகவும் கஷ்டப்பட்டு போட்டி போடுபவர்களுக்கு இதனால் வெறுப்பு உண்டாவது சகஜமான விஷயமே.

***


No comments:

Post a Comment