[பத்யம் #124] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் 124]
இரளு தி3வ பர்யந்த ஸ்ரீஹரி
ஸ்மரணெ மடி3 விஸ்மரணெ மெய்லிகெ3
அரியத3லெ இத3ன்னெல்ல காலதி3 ப3ரிதெ3 ப4வணெயலி |
எரகி3ஸுத சஞ்சலத3 மனவிரெ
ஸரிது3 போகு3வுதி3த3ர ஸாத4ன
மருளெ மத்ஸரிஸத3லெ ஸ்தி2ரத3லி ஹரிய ஸ்மரிஸுதிரு ||124
இரளு திவ பர்யந்த - இரவும் பகலுமாக (எப்போதும்); ஸ்ரீஹரி ஸ்மரணெ - ஸ்ரீஹரியின் ஸ்மரணையே; மடி - மடி எனப்படுகிறது; விஸ்மரணெ - அவனை சிந்திக்காதிருப்பது; மெய்லிகெ - விழுப்பு ஆகும். இதன்னெல்ல அரியதலெ - இதனை அறியாமல்; காலதி - எல்லா காலமும்; பரிதெ - வெறுமனே; பவணெயலி எரகிஸுத - சம்சாரத்தில் விழுந்து; ஸஞ்சலத மனவிரெ - சஞ்சலமான மனம் இருந்தால்; இதர ஸாதன - அனைத்து ஸாதனங்களும்; ஸரிது போகுவுது - வீணாகப் போகும்; மத்ஸரிஸதலெ - (மற்றவர்களைப் பார்த்து) பொறாமைப்படாமல்; மருளெ - மயங்காமல்; ஸ்திரதலி - திடமாக; ஹரிய ஸ்மரிஸுதிரு - ஸ்ரீஹரியை நினைத்துக் கொண்டிரு;
எது மடி, எது மெய்லிகெ என்பதை இந்த பத்யத்தில் விளக்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர்.
இரவும் பகலுமாக எப்போதும் ஸ்ரீஹரியின் ஸ்மரணையே மடி ஆகும். அவனை சிந்திக்காதிருப்பது விழுப்பு ஆகும். இதனை அறியாமல் அனைத்து காலங்களிலும் வெறுமனே சம்சாரத்தில் விழுந்து, சஞ்சலமான மனதினை கொண்டிருந்தால், நாம் செய்யும் அனைத்து சாதனைகளும் வீணாகப் போகும். மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படாமல் இருந்து, எதிலும் மயங்காமல், திடமான மனதுடன் ஸ்ரீஹரியை நினைத்துக் கொண்டிரு.
ஸ்ரீவிஜயதாஸர் தமது மடி ஸுளாதியில் ஒரு மிகப்பெரிய பட்டியலையே கொடுத்திருக்கிறார். அதைப் பார்த்து எது மடி, எது மெய்லிகெ என்பதை அறியலாம். அதையே இந்த பத்யத்திலும் சுருக்கமாக ஸ்ரீதாஸர் சொல்லியிருக்கிறார்.
காமக்ரோததலி திருகலு மடி அல்ல
காமன பளகக்கெ ஸோலலு மடி அல்ல
தாமஸ வ்ருத்தியலி இத்தரெ மடியல்ல
ஹேமத பயகெயலி சரிஸலு மடியல்ல
(மடி ஸுளாதி)
***
No comments:
Post a Comment