Monday, September 5, 2022

[பத்யம் #109] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #109] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் 109]

எடெ3யொளகெ3 3டி3ஸிருவ நானா

2டு3 ஸான்ன பதா3ர்த்த2தொ3ளகி3

த்33டகி34பிமானிக3 தத்33 ஹரிய ரூபக3 |

பி33தெ3 சிந்திஸி ஸர்வஜீவர

ஒட3லிகொ33கி3ஸி நிருத ஸலஹுவ

ம்ருடஸக2 ஸம்ஸ்மரிஸி உம்பு3தெ3 நித்ய உபவாஸ ||109 

எடெயொளகெ - இலையில்; படிஸிருவ - பரிமாறியிருக்கும்; நானா - பற்பல விதமான; ஷடுரஸான்ன - அறுசுவை கொண்ட; பதார்த்ததொளு - பதார்த்தங்களில்; இத்தடகித - அடங்கியிருக்கும்; அபிமானிகளின் - தத்வாபிமானிகளின்; தத்கத - அந்தர்யாமியான; ஹரிய ரூபகள - ஸ்ரீஹரியின் ரூபங்களை; பிடதெ சிந்திஸி - தொடர்ந்து சிந்தித்து; ஸர்வஜீவர - அனைத்து ஜீவர்களின்; ஒடலிகொதகிஸி - உடலில் இருந்து கொண்டு; நிருத ஸலஹுவ - எப்போதும் நிறைந்திருந்து காக்கும்; ம்ருடஸகன - விஷ்ணுவை; ஸம்ஸ்மரிஸி - சிந்தித்துக் கொண்டே; உம்புதே - உண்பதே; நித்ய உபவாஸ - (அந்த சாப்பாடும்) உபவாஸத்தைப் போன்றதே ஆகும். 

உணவுப் பதார்தங்களில் செய்ய வேண்டிய அனுசந்தானங்களைப் பற்றி ஸ்ரீதாஸர் இந்த பத்யத்தில் விளக்குகிறார். 

இலையில் பரிமாறியிருக்கும் பற்பல விதமான அறுசுவை கொண்ட பதார்த்தங்களில் அடங்கியிருக்கும் தத்வாபிமானிகளின் அந்தர்யாமியான ஸ்ரீஹரியின் ரூபங்களை தொடர்ந்து சிந்தித்து, அனைத்து ஜீவர்களின் உடலில் எப்போதும் நிறைந்திருந்து காக்கும் விஷ்ணுவை சிந்தித்துக் கொண்டே உண்பதானது, உபவாஸத்தைப் போன்றதாகும். 

இதையே ஸ்ரீஜகன்னாததாஸர், ஹரிகதாம்ருதஸார நைவேத்ய பிரகரண ஸந்தியில் இவ்வாறு கூறியிருக்கிறார். 

நூதன ஸமீசீன ஸுரஸோ

பேத ஹ்ருத்3 பதார்த்த2தொ3ளு விதி4

மாதெ தத்தத் ரஸக3ளொளு ரஸரூப தானாகி3 |

ப்ரீதிப3டி3ஸுத நித்யதி3 ஜக3

ந்னாத2விட2லன கூடி3 தா நி

ர்பீ4தளாகி3ஹளெந்த3ரிது3 நீ 4ஜிஸி ஸுகி2ஸுதிரு ||25 

புதியதாகவும், உத்தமமாகவும், மிகச்சிறந்த சுவைகளால் நிரம்பியும் இருக்கும் பதார்த்தங்களில் ரமாதேவியர் அந்தந்த சுவைகளில் தானே சுவையின் ரூபமாக இருந்து, ஸ்ரீஹரியை திருப்திப்படுத்தியவாறு, பரமாத்மனுடன் பிரியாமல் சேர்ந்திருந்து, பயப்படாமல் இருக்கிறாள் என்று அறிந்து, ஸ்ரீஜகன்னாதவிட்டலனை வணங்கியவாறு மகிழ்ச்சியோடு இரு

****


No comments:

Post a Comment