[பத்யம் #130] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் 130]
அரித1வனு நானல்ல கவனவ
ப3ரெவ மதி மொத3லில்ல இனிதி1ரெ
ப3ரெத3வனு நானெந்து3 பேளுவ மாது ஸல்லுவுதெ3? |
நரஹரியு ப்ரேரிஸித3 தெரெதொ3ளு
விரசிஸிதெ3னீ பத்3யமாலெய
கருணிஸலு கு3ரு பி3ம்ப3 ஸ்ரீ தந்தெ3 முத்து3மோஹனனு ||130
அரிதவனு நானல்ல - நான் எதையும் அறிந்தவன் அல்ல; கவனவ பரெவ மதி - இந்த பத்யங்களை எழுதும் அறிவு; மொதலில்ல - எனக்கு இல்லை; இனிதிரெ - இப்படியிருக்கையில்; பரெதவனு நானெந்து - இதை எழுதியவன் நான் என்று; பேளுவ மாது - நான் கூறினால்; ஸல்லுவுதெ - அது சரியாகுமா? நரஹரியு ப்ரேரிஸித தெரெதொளு - ஸ்ரீஹரியின் ஆணைப்படி; விரசிஸிதெனு - இயற்றினேன்; ஈ பத்யமாலெய - இந்த பத்யமாலாவை; குரு பிம்ப - குரு அந்தர்கதனான; ஸ்ரீதந்தெ முத்துமோஹனனு - ஸ்ரீதந்தெ மோகன விட்டலன்; கருணிஸலு - அருளினான்;
இந்த பத்யத்தை தன்னுடைய குர்வந்தர்கத ஸ்ரீஹரிக்கு சமர்ப்பிக்கிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர்.
நான் எதையும் அறிந்தவன் அல்ல. இந்த பத்யங்களை எழுதும் அறிவும் எனக்கு இல்லை. இப்படியிருக்கையில், இதை எழுதியவன் நான் என்று நான் கூறினால் அது சரியாகுமா?. ஸ்ரீஹரியின் ஆணைப்படி இயற்றினேன். இந்த பத்யமாலாவை குரு அந்தர்கதனான ஸ்ரீதந்தெ முத்துமோஹனனு அருளினான்.
****
நன்றி. வணக்கம்.
ReplyDelete