[பத்யம் #118] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் 118]
முக்தி ப3யஸுவ நரகெ3 ஸ்ரீஹரி
உத்தமோத்தமனெம்ப3 ஞானத3
ப4க்திபூர்வக ஸ்மரணெயொந்தே3 ஸாகு நித்யத3லி |
ப்4ருத்ய ப்4ருத்யர ப்4ருத்யனெந்த3ரெ
தத்தளவகொ3ளிஸத3லெ ஸலஹுவ
பெத்த ஜனனீ ஜனகரந்த3தி3 தா3ஸஜன போஷ2 ||118
முக்தி பயஸுவ - முக்தியை விரும்புவதான; நரகெ - மனிதர்களுக்கு; ஸ்ரீஹரி - ஸ்ரீஹரியானவர்; உத்தமோத்தமனெம்ப - ஸர்வோத்தமன் என்னும்; ஞானத ஸ்மரணெயொந்தெ - ஞானத்தின், ஸ்மரணை மட்டுமே; பக்திபூர்வக - பக்தி பூர்வகமாக; ஸாகு - போதும்; நித்யதலி - எப்போதும்; ப்ருத்ய ப்ருத்யர ப்ருத்யனெந்தரெ - தாஸரின் தாஸரின் தாஸன் நான் என்றால்; தத்தளவ கொளிஸதலெ - எவ்வித தாமதமும் இல்லாமல்; பெத்த - நம்மைப் பெற்றவர்களான; ஜனனி ஜனகரந்ததி - தாய் தந்தையைப் போல; ஸலஹுவ - அருள்வான்; தாஸஜன போஷ - தாஸர்களைக் காப்பவனான ஸ்ரீஹரி.
ஸ்ரீஹரி ஸர்வோத்தமத்வ ஞானத்தின் முக்கியத்துவத்தை இந்த பத்யத்தில் இவ்வாறு விளக்கியிருக்கிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர்.
முக்தியை விரும்புவதான மனிதர்களுக்கு, ஸ்ரீஹரியே ஸர்வோத்தமன் என்னும் ஞானத்தின் ஸ்மரணை மட்டுமே பக்தி பூர்வகமாக போதும். மேலும், ஸ்ரீஹரியின் தாஸரின் தாஸரின் தாஸன் நான் என்று கூறினால் (அனுசந்தானம் செய்தால்); எவ்வித தாமதமும் செய்யாமல், நம்மைப் பெற்றவர்களான தாய் தந்தையரைப் போல, ஸ்ரீஹரியானவர் நம் தாய் தந்தையரைப் போல வந்து நம்மை அருள்வான்.
ஹரி ஸர்வோத்தமத்வத்தைப் பற்றி ஹரிகதாம்ருதஸாரத்தில் பல பத்யங்கள் இருந்தாலும், ஒன்றை மட்டும் இங்கே பார்ப்போம்.
எரடு3 தீ3க்ஷெக3ளிஹவு பா3ஹ்யா
ந்தரவெனிப நாமத3லி பு3த4ரி
ந்த3ரிது தீ3க்ஷிதனாகு3 தீர்க்க4 த்3வேஷ2க3ள பி3ட்டு |
ஹரியே ஸர்வோத்தம க்ஷராக்ஷர
புருஷபூஜிதபாத3 ஜன்மா
த்3யரவிதூ3ர ஸுகா2த்ம சர்வக3னெந்து3 ஸ்மரிஸுதிரு ||(16-18)
ஹரியே சர்வோத்தமன். க்ஷராக்ஷர புருஷர்களான பிரம்மாதிகளால் பூஜிக்கப்படுபவனான பாத கமலங்களைக் கொண்டவன். பிறப்பு இறப்பு முதலான தோஷங்கள் இல்லாதவன், ஆனந்த ஸ்வரூபன். அனைத்து இடங்களிலும் வியாபித்திருப்பவன் என்று அறிந்து எப்போதும் அவனை வணங்கிக் கொண்டிருப்பதே அக தீட்சை.
***
No comments:
Post a Comment