[பத்யம் #112] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் 112]
நுடி3து3 ப3ரெயுவ ஓது3வெடெ3யொளு
வட3னெ தத்வத்3வர்ண வாச்யன
பி3ட3தெ3 திளியுத1ஜாதி3 ஐவத்தொந்து3 ரூபக3ள |
த்4ருட3தி3 ஈர்த3ஶ சதுர மூர்த்தி2ய
தடெ3யத3லெ தத்வரொளு சிந்திஸி
கடு3 ஸுபூஜெ இதெ3ந்து3 ஹரிக3ர்ப்பிபரு நிர்மமரு ||112
நுடிது - பேசும்; பரெயுவ - எழுதும்; ஓதுவ - படிக்கும்; எடெயொளு - எழுத்துக்களின்; வடனெ - எப்போதும்; தத்வத்வர்ண - அந்தந்த எழுத்துக்களின்; வாச்யன - தலைவனை; பிடதெ திளியுத - எப்போதும் அறிந்தவாறு;
ஐவத்தொந்து ரூபகள - 51 ரூபங்களை; ஜாதி - எழுத்துக்களை; ஈர்தஷ சதுர மூர்த்திய - 24 மூர்த்திகளை; தடெயதலெ - தொடர்ந்து இடைவிடாமல்; தத்வரொளு சிந்திஸி - தத்வாபிமானி தேவதைகளில் சிந்தித்து; கடு - சிறந்த; ஸுபூஜை - பூஜை; இதெந்து - இதுவே என்று; நிர்மமரு - வைராக்கியசாலிகள்; ஹரிகர்ப்பிபரு - ஸ்ரீஹரிக்கு அர்ப்பணம் செய்வார்கள்.
வர்ணாபிமானி தேவதைகள் அவர்களில் அந்தர்யாமியாக இருக்கும் பகவந்தனை சிந்திக்கும் விதங்கள் பற்றிய விஷயத்தை இந்த பத்யத்தில் விளக்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர்.
நாம் பேசும், எழுதும், படிக்கும் எழுத்துக்களின்; அந்தந்த எழுத்துக்களின் தலைவனை எப்போதும் அறிந்தவாறு, அந்த 51 ரூபங்களை, 24 மூர்த்திகளை தொடர்ந்து விடாமல், அந்த தத்வாபிமானி தேவதைகளில் சிந்தித்து,இதுவே சிறந்த பூஜை என்று வைராக்கியசாலிகள் ஸ்ரீஹரிக்கு அர்ப்பணம் செய்வார்கள்.
இந்த அனுசந்தானத்தை, ஸ்ரீஜகன்னாததாஸர், ஹரிகதாம்ருதஸாரத்தில் இவ்வாறு விளக்கியிருக்கிறார்.
ஸுதபனேகோத்தர ஸுபஞ்சா
ஷத வரண கரணதி3 சதுரவிம்
ஷதி ஸுதத்வதி3 தா4துக3ளொளித்த3விர த3னிருத்3த4 |
ஜதனமாள்பனு ஜக3தி3ஜீவ
ப்ரததிக3ள ஷண்ணவதி நாமக
சதுரமூர்த்தி க3ளர்ச்சிஸுவ ரத3ரிந்த3 ப3ல்லவரு ||23
சூரியனில் இருந்துகொண்டு உலகத்தில் நன்றாக வெப்பத்தை உருவாக்குவதால் சுதப என்று பெயரைக் கொண்ட பரமாத்மன் 51 அ-முதலான அனைத்து எழுத்துக்களில், மனோ இந்திரியத்திற்கு, காரணமான இதய கமலத்தின் 12 இதழ்களிலும், 24 தத்வங்களிலும் எலும்பு, தோல் முதலான 7 தாதுகளில் இருந்து அனிருத்த நாமக ஸ்ரீபரமாத்மன் இடைவிடாமல் (தொடர்ந்து) உலகத்தில் ஜீவர்களை காப்பாற்றுவான், ஆகையால் ஷண்ணவதி என்று பெயரைக் கொண்ட 96 ரூபங்களைக் கொண்ட ஸ்ரீபரமாத்மன், அனிருத்த அனிருத்த, அனிருத்த பிரத்யும்ன, அனிருத்த சங்கர்ஷண, அனிருத்த வாசுதேவ என்னும் அனிருத்தனின் நான்கு ரூபங்களை, அறிந்தவர்கள் / ஞானிகள் அர்ச்சிக்கின்றனர்.
****
No comments:
Post a Comment