[பத்யம் #129] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் 129]
தா3ஸனெம்பு3வ ப3லுஹு எனகி3தெ3
தா3ஸதா3ஸர சரண தா3ஸ்யத3
மீஸலின ஆ பா4க்3ய என்னது3 தா3ஸ பத3தூ4ளி
பூ4ஷணவு ஶிரமுகுட எனக3து3
ஏஸு புண்யத3ராஶி ஒத3கி3தோ
தா3ஸவம்ஶதி3 தந்து3 என்னனு த4ன்யனெனிஸித3ரு ||129
தாஸனெம்புவ - ஹரிதாஸன் என்னும்; பலுஹு எனகிதெ - (கர்வம்) சாமர்த்தியம் எனக்கு இருக்கிறது; தாஸதாஸர - ஹரிதாஸர்களின்; சரண தாஸ்யத - சரணத்தை அடைவதற்கு; மீஸலின - தனிப்பட்டதான (special); ஆ பாக்ய - அந்த பாக்கியம்; என்னது - எனக்கு கிடைத்திருக்கிறது; தாஸ பததூளி - தாஸர்களின் பாததூளியானது; பூஷணவு - ஆபரணம்; எனகது ஷிரமுகுட - எனக்கு அது தலைக்கிரீடம் ஆகும்; ஏஸு புண்யதராஷி - எவ்வளவு புண்ணியங்களின் கூட்டம்; ஒதகிதோ - வந்து சேர்ந்ததோ; என்னனு - என்னை; தாஸவம்ஷதி தந்து - ஹரிதாஸ வம்சத்தில் நான் வந்து; என்னனு - என்னை; தன்யனெனிஸிதரு - தன்யன் என்றனர்.
தன்னுடைய குருகளை வணங்கியவாறு, இந்த ஹரிதாஸ ஸாகித்யத்திற்கு தான் வந்து ஹரிதாஸன் ஆனது மிகப்பெரிய பாக்கியம் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர்.
ஹரிதாஸன் என்னும் கர்வம் / சாமர்த்தியம் எனக்கு இருக்கிறது. ஹரிதாஸர்களின் சரணங்களின் தாஸ்யத்தை அடைவதற்கு தனிப்பட்டதான அந்த பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. அத்தகைய தாஸர்களின் பாததூளியானது, எனக்கு அதுவே தலைக்கிரீடம் ஆகும். இதனால் எவ்வளவு புண்ணியங்களின் கூட்டம் எனக்கு வந்து சேர்ந்ததோ, அதனால் நான் இந்த ஹரிதாஸ வம்ஸத்தில் வந்து தன்யன் ஆனேன்.
ஸ்ரீவிஜயதாஸர், ஸ்ரீவேணுகோபால விட்டலதாஸர், ஸ்ரீவ்யாஸ விட்டலர் ஆகியோரில் வந்த ஹரிதாஸ பரம்பரையில் வந்த ஸ்ரீதந்தெமுத்து மோகன விட்டலதாஸர் (பரமப்ரிய ஸுப்பராய தாசர்) அவர்களிடமிருந்து ‘ரமாகாந்த விட்டலா’ என்று அங்கிதமும், ஹரிதாஸ தீக்ஷையையும் பெற்றவர் நம் ஸ்ரீதாஸர். இத்தகைய சிறப்பு வாய்ந்த பரம்பரையில் வந்ததை நினைத்து அது தனக்கான மிகப்பெரிய பாக்கியம் என்று இந்த பத்யத்தில் கூறி மகிழ்கிறார்.
***
No comments:
Post a Comment