Monday, October 2, 2023

#275 - 813-814-815 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***  

813. ஸ்ரீ அக்ஷோப்4யாய நம:

க்ஷோப்4யனல்ல சலனீயனல்ல நீஅக்ஷோப்4 நமோ

உத்33 ஸ்தை2ர்யாதி3 ஸுபூர்ண நிஜஸச்சக்திமந்தனு

அப்3தி4யலி மஹாமந்த3ராத்3ரிய ஹொத்து இஹனு

பி3ரம்மாண்ட3க்கெ ஆதா4ரனாகி3 கூர்ம ஸ்தி2ரதி3 

மாற்றங்கள் இல்லாதவனே. பிறப்பு இறப்புகள் இல்லாதவனே. அக்‌ஷோப்யனே உனக்கு என் நமஸ்காரங்கள். அபாரமான ஸ்தைர்ய முதலான குணங்களை முழுமையாக கொண்ட சக்திமந்தன், பாற்கடலில் மந்தர மலையை தாங்கியவனே. இந்த பிரம்மாண்டத்திற்கு ஆதாரமாக, கூர்மனாக ஸ்திரமாக இருப்பவனே. 

814. ஸ்ரீ ஸர்வவாகீ3ஶ்வராய நம:

கர்மஸ்வாமி பூ4ம்யாதீ4ஸர்வ வாகீ3ஶ்வரேஶ்வர

நமோ நினகெ3 உமாபதி ருத்ரனிகு3 ஶ்வரனு

கர்ம தே3ஹரத2 ஶ்வ உத்34ரணார்த்த2 வாக் உமா

பூ4மி ப்ருத்2வி மனோமானி ஸாரதி2ரதி2 நீனு 

கர்மங்களின் தலைவனே. ஸர்வ வாகீஸ்வரனே உனக்கு என் நமஸ்காரங்கள். உமாபதியான ருத்ரனுக்கு நீயே ஈஸ்வரன். கர்ம தேகரத என்னும் அஷ்வத்தினை உத்தாரம் செய்வதற்காக இருப்பவனே. மனோபிமானியான உமாதேவி, பூமி, ப்ருத்வி ஆகிய அனைவருக்கும் நீயே தலைவனாக இருக்கிறாய். 

815. மஹாஹ்ருதா3 நம:

அந்தரிக்ஷவனு அதிக்ரமண மாடு3வவனு

ஸதா3 ஶரணுமஹாஹ்ருத3னே நமோ நமோ எம்பெ3

த்3யு அந்தரிக்ஷா ப்ருத்2வி ஆயதன நீ நின்ன ஒள

ஸ்தி2 ஸர்வவு மஹாத்3யுதி ஸிந்து4வத் 3ம்பீ4 

ஆகாஷத்தையும் மீறியவனே. மஹாஹ்ருதனே உனக்கு என் நமஸ்காரங்கள். த்யு, அந்தரிக்‌ஷ, ப்ருத்வி ஆகிய அனைத்தையும் மீறியவனே / அளந்தவனே. நீயும் உன் உள்ளே இருக்கும் அனைத்தும் மிகப்பெரிய கடலான ஸிந்துவைப் போல கம்பீரமானது. 

***


No comments:

Post a Comment