ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
861. ஸ்ரீ க்ஷமாய நம:
ஸ்ரீ பூ4 மத்து பி3ரம்ம ஶிவ ஶக்ர ஸர்வதே3வர்க3ள
த்3யுப்4யாதி3க3ளன்னு நீ ஸஹன மாள்பி ‘க்ஷம’ நமோ
ஹே ப4க3வன் நீ ஸஹன ஶக்திகா3தா4ரனாகி3ஹி
ஈ பூ4மிதே3விய க்ஷமாஶக்திகெ3 ஆதா4ர நீனே
லட்சுமிதேவி, பிரம்ம, ருத்ர, இந்திர என அனைத்து தேவர்களின் தவறுகளையும் நீ சகித்துக் கொள்கிறாய். க்ஷமனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஹே பகவானே. நீ சகிப்புத்தன்மைக்கு ஆதாரமாக இருக்கிறாய். இந்த பூமிதேவியின் சகிப்புத் தன்மைக்கு ஆதாரம் நீயே.
862. ஸ்ரீ ஸுபர்ணாய நம:
ஈ பூ4மி ஸம்யக் வ்யாபிஸிஹ ‘ஸுபர்ண’ நமோ எம்பெ3
ஸம்பூர்ணத்வதி3ந்த3லி ‘ஸு’ பாலன கர்த்ருத்வதி3ந்த3
நீ ‘பர்ண’ ஸ்ரீவிஷ்ணு ரஹஸ்யோக்தி ஹீகெ3 இருவுது3
‘பத்ரம் ஸர்வக3தத்வேன பர்ணபாலன ரூபணாத்’
இந்த பூமி முழுக்க வ்யாபித்திருப்பவனே. ஸுபர்ணனே உனக்கு என் நமஸ்காரங்கள். சம்பூர்ணனாக இருப்பதால் நீ ‘ஸு’. அனைவரையும் காப்பதால் நீ ‘பர்ண’. என விஷ்ணு ரகஸ்ய கிரந்தம் உன்னை - பத்ரம் ஸர்வகதத்வேன பர்ணபாலன ரூபணாத்’ என்று இதையே சொல்கிறது.
863. ஸ்ரீ வாயுவாஹனாய நம:
த4னவாஹக நீனு ‘வாயுவாஹன’ நமோ எம்பெ3
த4ன வீவி ப4க்தகெ3 ஹஸ்த 3த்வயதி3ம் பாசி பாசி
ஞான ப3லபூர்ண ஸ்வரூப நீனு வாய்வாதி3க3ள
ஞானாதி3 தா3தனாகி3ருவி வாய்வந்தர்க3தனாகி3
பசு வாகனனே. வாயுவாஹனனே உனக்கு என் நமஸ்காரங்கள். உன் பக்தர்களுக்கு நீ, உன் இரண்டு கைகளாலும், அபாரமான செல்வத்தினை, அள்ளி அள்ளிக் கொடுக்கிறாய். ஞான பல பூர்ண ஸ்வரூபனே. வாயுதேவர் முதலானோருக்கு ஞானம் வழங்குபவனே. வாயுவின் அந்தர்கதனாக இருப்பவனே.
***
No comments:
Post a Comment