Tuesday, October 17, 2023

#287 - 849-850-851 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

849. ஸ்ரீ அத்4ருதாய நம:

யுத்34தா4ரண ஸாமர்த்4 நினகு3ண்டு நீ கொடு3வி

யுத்34தா4ரண ஸாமர்த்4 நின்னிச்செயிம் யதாயோக்3

அத்4ருத நமோ நினகெ3 ஸ்வதந்த்ரப3லாதி3 பூர்ண

ஆதா4 நினகெ3 யாரூ இல்லா நீனே ஸார்வாதா4 

யுத்தத்தை செய்யும் சாமர்த்தியம் உனக்கு உண்டு. நீ யதா யோக்யமானவர்களுக்கு அதனை கொடுக்கிறாய். அத்ருதனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்வதந்த்ரமாக பல (வலிமை) ஆகியவற்றை முழுமையாக கொண்டவனே. உனக்கு ஆதாரம் என்று யாரும் இல்லை. நீயே ஸர்வாதாரன். 

850. ஸ்ரீ ஸ்வத்4ருதாய நம:

ஸ்வத்4ருத 4னதா4ரி நமோ ஸ்ரீகர நாராயண

ஆதி3த்ய சந்த்3ரானபி ஶங்க2 சக்ர ஶங்க2ப்ரஸூனௌ

க்2 நிதி4 3தா3: சிந்த்ய: கராப்4யாம் வஸு தர்பய

: ஸ்வாந்தஸ்த2 லக்ஷ்மி 3ருடா3ம்ஷ ஸம்ஸ்த2:’ மந்த்ரஜப்ய 

ஸ்வத்ருதனே. செல்வங்களுக்கு ஆதாரமானவனே. ஸ்ரீகர நாராயணனே. ஆதித்ய சந்த்ரானபி என்னும் மந்திரத்திற்கு உரியவனே. 

851. ஸ்ரீ ஸ்வாஸ்த்2யாய நம:

உத்தம ரீதியந்த3லி தத்தத் யோக்3யதெ அரிது

4க்தரிகெ3 மோக் ப்ராபகனாகி3ருவி நீ ஸ்ரீ

ஆத்33ரிந்த3ஸ்வாஸ்த்யனெந்தெ3னிஸுவி நமோ நினகெ3

ஶ்வேத த்3வீப அனந்தாஸன வைகுண்ட2ஸ்வாமி 

உத்தம ரீதியில் அவரவரகளின் யோக்யதைகளை அறிந்து, பக்தர்களுக்கு மோட்சத்தை அருள்பவனாக இருக்கிறாய். ஸ்ரீஷனே. ஆகையால் ஸ்வாஸ்த்ய என்று அழைக்கப்படுகிறாய். ஸ்வேதத்வீப, அனந்தாஸன, வைகுண்டத்தில் இருப்பவனே. ஸ்வாமியே. 

***


No comments:

Post a Comment