ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
825. ஸ்ரீ அம்ருதாம்ஶாய நம:
நித்யமுக்த அவதார ‘அம்ருதாம்ஶ’ நமோ எம்பெ3
மத்ஸ்ய கூர்ம கோல நரஸிம்ஹ பா4ர்க்க3வ
தோயஜாக்ஷி ஸீதாரமண வாமன யாத4வ பு3த்3த4 கல்கி
ஹயமுக2 வ்யாஸ மோஹினி த4ன்வந்தரீத்யாதி3யு
நித்யமுக்த அவதாரனே. அம்ருதாம்ஷனே. உனக்கு என் நமஸ்காரங்கள். மத்ஸ்ய கூர்ம வராஹ நரசிம்ம பார்க்கவ தாமரைக் கண்களைக் கொண்டவளான சீதாதேவியின் ரமணனனே, வாமனனே, கிருஷ்ணனே, புத்தனே கல்கியே, ஹயவதனனே. வ்யாஸனே. மோகினியே. தன்வந்த்ரி ஆகிய அவதாரங்களை எடுத்தவனே.
826. ஸ்ரீ அம்ருதவபுஷே நம:
முக்திஸாத4ன ஸம்பத் ஹொந்து3வுத3கெ ஸாத4ன நீனு
ஸதா3 நமோ ‘அம்ருதவபு’ ஸ்வஸ்வரூபானந்த3
ஒத3கி3ஸுவானந்த3மய ஸர்வஸ்வாமி முகுந்த3
அம்ருதார்த்த2 நீ கொண்டி3 அஜித த4ன்வந்தரி ஸ்த்ரீரூப
முக்திக்கு ஸாதனம் நீயே. செல்வம் அடைவதற்கு ஸாதனம் நீயே. அம்ருதவபுஷே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்வஸ்வரூபானந்தனே. ஆனந்தத்தை அருள்பவனே. ஸர்வஸ்வாமியே. முகுந்தனே. அமிர்த என்னும் அர்த்தத்தை கொண்டவனே. அஜிதனே. தன்வந்திரியே. ஸ்த்ரீரூபியே.
827. ஸ்ரீ ஸர்வக்ஞாய நம:
நின்ன ப்ரேரணெகெ3 விஷயவாத3வுக3ள ஞான
பூர்ணவாகி3 உள்ளவனு ‘ஸர்வக்3ஞ’ நமோ நினகெ3
நீனு சர்வவிஷயக ஞானவந்தனு எம்பு3த3னு
ஆம்னாயாதி3 ஸதா3க3மக3ளு த்3ருட4தி3 ஸாருத்தெ
உன் அதீனத்தில் உள்ள அனைத்து விஷயங்களின் ஞானத்தையும் பூரணமாக கொண்டவனே. ஸர்வக்ஞனே. உனக்கு என் நமஸ்காரங்கள். நீ அனைத்து விஷயங்களின் ஞானம் உள்ளவன் என்பதை, வேத, ஆகமங்கள் திடமாக விளக்குகின்றன.
***
No comments:
Post a Comment