Thursday, October 19, 2023

#289 - 855-856-857 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

855. ஸ்ரீ கதி2தாய நம:

ஸ்தோமாதி3 வேத33ளிந்த3 ப்ரதிபாதி3அதி2

நமோ நினகெ3வேதே3ஶ்ச ஸர்வை ரஹமேவ வேத்4:

ஶாஸ்த்ரயோனித்வாத் தத்துஸமன்வயாத் ஸர்வேவேதா3யத்

பத3மாமனந்தீ விஷ்ணு: ஸர்வத்ரகீ3யதே ஹீகெ3 

வேதங்களால் ப்ரதிபாதனை செய்யப்படுபவனே. கதிதனே உனக்கு என் நமஸ்காரங்கள். வேதைஸ்ச ஸர்வை, சாஸ்த்ர யோனித்வாத், தத்துஸமன்வயாத், ஸர்வேவேதாயத் பதமானந்தீ, விஷ்ணு: ஸர்வத்ரகீயதே போன்ற ப்ரம்ம ஸூத்ரங்கள் மற்றும் வேத மந்திரங்கள் ஆகியவற்றால் போற்றப்படுபவனே.

856. ஸ்ரீ யோகி3னே நம:

ஶக்திமந்தயோகி3நமோ நமோ எம்பெ3 ஶக்திரூப

மோசக ஸூக்ஷ்மாsஸூக்ஷ்ம அம்ருத ஞானாம்ருத ஆப்யா

யனீ வ்யாபினி வ்யோம ரூபிண்யவந்தனு அணிமா

மஹிம ப்ராப்தி லகி3மா ப்ரகா ஶித்வா ப்ராகாம்யா 

சக்திவான் யோகினே உனக்கு என் நமஸ்காரங்கள். சக்தி ரூபனே. சம்சார சாகரத்திலிருந்து விமோசனம் கொடுப்பவனே. சூக்‌ஷ்ம, அசூக்‌ஷ்ம என வ்யாபித்திருப்பவனே. அம்ருதனே. ஞானாம்ருதனே. அனைத்து இடங்களிலும் வ்யாபித்திருப்பவனே. தேவலோகத்தில் ரூபம் கொண்டவனே. அணிமா மகிமா லகிமா ஆகிய மகிமைகளை கொண்டவனே. ஒளிமயமானவனே. ஸ்வதந்த்ரனே. 

857. ஸ்ரீ யோகீ3ஶாய நம:

ரதா2ஶ்வக3 ஸம்ப3ந்த4காரி வாயுதே3வரிகெ3

அதி4 நீயோகீ3ஶனே நமோ எம்பெ3 மஹராஜா

தே3ஹரத2 சக்ஷுராதி33ஶ்வ உமா லகா3ம்

ருத்3ரஸாரதி2 மனஸ் ஸம்ப3ந்த4வாயு நீ ரதி2 

குதிரைகள் கட்டிய ரதங்களுக்கு சம்பந்தப்பட்டவரான வாயுதேவருக்கு அதிபதி நீயே. யோகீஷனே. உனக்கு என் நமஸ்காரங்கள். தேகம் என்னும் ரதத்திற்கு நீயே மகாராஜா. கண்களே குதிரைகள். பார்வதிதேவி லகான் பிடிக்க, ருத்ரதேவர் சாரதியாக இருக்க, மனஸ்ஸினை வாயுதேவர் செலுத்த, நீயே ரதிகனாக இருக்கிறாய். 

***


No comments:

Post a Comment