ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
852. ஸ்ரீ ப்ராக்3வம்ஶாய நம:
உத்தம ரீதியலி ப3ருவவனு ப3ந்து3 நீனு
பு3த்3தி4யலி நில்லுவி ‘ப்ராக்3வம்ஶ’ நமோ நமோ எம்பெ3
பத்3மஜாதி3 ஞானி ஸுரவம்ஶக்கு ப்ராக் நாராயண
பி3ரம்ம ஜனக தூ3ர்வாஸாதி3 ஞானிக3ள் ப்ராக் ஹம்ஸனு
உத்தமமான வகையில் தரிசனம் அளித்து, அனைவரின் புத்தியிலும் நிற்பவனே. ப்ராக்வம்ஷனே. உனக்கு என் நமஸ்காரங்கள். பிரம்மனில் துவங்கி அனைத்து தேவர்களுக்கும் நீயே ப்ராக் நாராயணன். பிரம்ம, துர்வாஸர் முதலான ஞானிகளுக்கு நீயே ப்ராக் ஹம்ஸன்.
853. ஸ்ரீ வம்ஶவர்த்த4னாய நம:
ஸோமவன்னு குரிது அபி4வ்யக்தி ஆகு3வவ
ஸுமனோஹர ‘வம்ஶவர்த்த4னனே’ நமோ நினகெ3
கமலாஸனாதி3 ஞானிஶிஷ்ய வம்ஶவர்த்த4ன ஹம்ஸ
அமலப4க்த பாண்ட3வாதி3க3ள வம்ஶவர்த்3த4ன
யாகத்திற்கு பலனாக தோன்றுபவனே. மனோகரனே. வம்ஷவர்த்தனனே. உனக்கு என் நமஸ்காரங்கள். பிரம்மன் முதலான ஞானி சிஷ்யர்களின் வம்சத்தை வளர்ப்பவனே. ஹம்ஸனே. அபாரமான பக்தர்களான பாண்டவாதிகளின் வம்சங்களை வளர்த்தவனே.
854. ஸ்ரீ பா4ரப்4ருதே நம:
ஸோமதா4ரக ‘பா4ரப்4ருத்’ நமோ நமோ எம்பெ3
பூ4மி மொத3லாத3 பி3ரம்மாண்ட3வ கூர்மரூபதி3ந்த3
ஸ்வாமி நீ ஹொத்திஹியோ ஹாகே3வே ஸர்வ சராசர
மூர்த்தாsமூர்த்தவஸ்துக3ளிகெ3 நீ ஸ்வதந்த்ர ஆதா4ர
அமிர்தத்தை ஏந்தியவனே. பாரப்ருதே உனக்கு என் நமஸ்காரங்கள். பூமி முதலான பிரம்மாண்டத்தை, கூர்ம ரூபத்தினால் தாங்கிய ஸ்வாமி நீ. அப்படியே அனைத்து சராசர வஸ்துகளுக்கு நீயே ஸ்வதந்த்ர ஆதாரமானவன்.
***
No comments:
Post a Comment