ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
843. ஸ்ரீ அசிந்த்யாய நம:
அபீ4ஷ்ட கொட3லிக்கெ காரணனெந்து3 த்4யானிஸி
கொம்பு3த3க்கெ யோக்3ய நீ ‘அசிந்த்ய’ நமோ நமோ எம்பெ3
அத்3பு4த மஹிம ஸாகல்யேன சிந்திதுமஶக்ய
‘அப்ராப்ய மனஸாஹஹ’ எந்தி3ஹுது3 வேத3த3ல்லி
இஷ்டார்த்தங்களை கொடுப்பதற்கு நீயே காரணம் என்று த்யானம் செய்வதற்கு யோக்யன் நீயே. அசிந்த்யனே உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னுடைய அற்புத மகிமைகளை முழுவதுமாக சிந்திப்பதற்கு அசாத்தியமானது. அப்ராப்ய மனஸாஹஹ என்று வேதம் உன்னை புகழ்கிறது.
844. ஸ்ரீ ப4யக்ருத் ப4யனாஶனாய நம:
தே3ஹஸம்ப3ந்த4 ஜீவரிகெ3 கொடு3வவனு நீனு
தே3ஹாபி4மானஹர ‘ப4யக்ருத் ப4யனாஶ’ நமோ
மஹது3ஷ்டரிகெ3 ப4யக்ருத் ப4க்த ப4யஹர நீனு
மஹத்பி3ரம்மாண்டா3தி3 ஸ்ருஷ்டாபாதா அத்தா ஸர்வேஶ
ஜீவர்களுக்கு தேக சம்பந்தத்தை கொடுப்பவன் நீயே. அதே தேக அபிமானத்தை விடுவிப்பவனும் நீயே. பயக்ருத் பயனாஷனனே உனக்கு என் நமஸ்காரங்கள். மஹா துஷ்டர்களுக்கு பயத்தை கொடுத்து, அதே பயத்தை போக்குபவனும் நீயே. மஹத்தான இந்த பிரம்மாண்டத்தை ஸ்ருஷ்டி செய்த பாதனே. ஸர்வேஷனே.
845. ஸ்ரீ அணுர்ப்4ருஹதே நம:
ஸூக்ஷ்ம நீ அணுமஹத் ஸ்வரூபவந்த ‘அணுர்ப்4ருஹத்’
நமோ எம்பெ3 நீ அணோரணீயான் மஹிதோமஹீயான்
ஆம்னாய ஸாருதிரெ நீ அணுவொளு அந்தர்க3த
க4னமஹா ப்3ருஹதிகு3 தொ3ட்3ட3வ ஸர்வவ்யாபியு
அணு, மஹத், ஸூக்ஷ்ம என ஸ்வரூபங்களை கொண்டிருப்பவனே. அணுர்ப்ருஹதனே உனக்கு என் நமஸ்காரங்கள். நீ அணுவைவிட அணுவானவன். மஹத்தை விட மஹத்தானவன். என்று வேதங்கள் உன்னை புகழ்கின்றன. நீ அணுவில் அந்தர்கதனாகவும், மிகப் பெரிய பொருட்களில் அதனைவிட பெரியதாக இருப்பவன். அனைத்து இடங்களிலும் வ்யாபித்திருப்பவன்.
***
No comments:
Post a Comment