Saturday, October 28, 2023

#297 - 876-877-878 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

876. ஸ்ரீ ஸத்யத4ர்ம பராயணாய நம:

ஸாத்விக 4ர்மத3லே தாத்பர்யவந்தர ஶ்ரய

ஸத்யத4ர்ம பராயணனே நமோ எம்பெ3 நினகெ3

ஸத்யத4ர்ம தோரத3வரிகெ3 பரான்முக2னாகி3

நித்ய: இஹபரதி3 க்லேஶதி3 முளுகி3ஸுவி 

ஸாத்விக தர்மத்தையே பின்பற்றுபவர்களின் ஆஸ்ரயனே. ஸத்யதர்ம பராயணனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஸத்ய தர்மத்தை பின்பற்றாதவர்களுக்கு, அவர்களுக்கு அருளாமல், இஹத்தில் & பரத்தில் கஷ்டங்களை கொடுத்து, சம்சாரத்தில் மூழ்கடிக்கிறாய். 

877. ஸ்ரீ அபி4ப்ராயாய நம:

ஸர்வரீதியிந்த3 ஶ்ரேஷ்ட ப்ரேரகத்வ 4ர்ம உள்ள

ஸ்ரீவரனேஅபி4ப்ராய நமோ எம்பெ3 ஸம்ரக்ஷயாம்

ஸர்வதா3 த்வத்ப4க்தரலி 4க்தி இத்து ஸத்ய 4ர்ம

ஸுவ்ரத சரிப1ந்தெ1 மனோவ்ருத்3தி4 நியமிஸுவி 

அனைத்து ரீதியினால் மிகச் சிறந்ததான நியமனம் செய்யும் தர்மத்தைக் கொண்ட ஸ்ரீவரனே. அபிப்ராயனே உனக்கு என் நமஸ்காரங்கள். எப்போதும் உன் பக்தர்களை காக்கிறாய். உன் பக்தர்களுக்கு பக்தியை கொடுத்து, ஸத்ய தர்ம ஸுவ்ரதங்களை அவர்கள் செய்யுமாறு , அவர்களுக்கு மனதினை கொடுக்கிறாய். 

878. ஸ்ரீ ப்ரியார்ஹாய நம:

ஸ்வாமி நீனே ஸ்தோத்ரயோக்3ப்ரியார்ஹனு நமோ எம்பெ3

நிமித்தவில்லத3 நித்ய 3ந்து3 காருண்யார்ணவனு

ரமா மனோஹர நீனு ஸுக2மயனு ஸுகார்ஹ

அமல 4க்தரிந்த3 ஸம்ஸ்துத்ய ப்ரீத்யர்ஹ ப்ரியார்ஹ 

ஸ்வாமி, நீயே ஸ்தோத்திரம் செய்யத் தக்கவன். ப்ரியார்ஹனே. உனக்கு என் நமஸ்காரங்கள். எந்தவொரு பலனையும் எதிர்பார்க்காத நிரந்தர நண்பன். காருண்யத்தைக் கொண்டவன். ரமா மனோஹரனே. ஸுகமயனே. சுகத்தை கொடுப்பவனே. பக்தி செய்யும் பக்தர்களால் வணங்கப்படுபவனே. அன்பு செய்வதற்கு தக்கவனே. 

***


No comments:

Post a Comment