Tuesday, October 24, 2023

#294 - 867-868-869 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

867. ஸ்ரீ 3யயித்ரே நம:

4க்தரிகெ3 ஸந்தோஷ ஒத3கி3ஸுவி3யயிதா

ஸதா3 நமோ 4க்தத்விட் தை3த்யஸம்ஹாரி 3லபூர்ண

ப்ரதியொந்து3 பி3ரம்மன தி3னத3ல்லு அவதரிஸி

தை3த்ய நிக்3ரஹ 4க்தானுக்3ரஹ மாள்பி ஸ்ரீய:பதே 

பக்தர்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பவனே. தயயித்ரே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்களை காப்பவனே. தைத்யர்களை கொல்பவனே. பலபூர்ணனே. அனைத்து பிரம்மனின் நாளிலும் அவதரித்து, தைத்யர்களை கொன்று, பக்தர்களை அருள்பவனே. ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. 

868. ஸ்ரீ 3யாய நம:

4க்தரிகெ3 அபீ4ஷ்டவ ஈவி3யா நமோ எம்பெ3

4க்தருக3ளு அஸாது4 விஷய மக்3னராக3தெ3

இந்த்3ரிய நிக்3ரஹமாள்ப க்ரியானியாமக ஸ்வாமி

4க்தஞானானந்தா3த்3யபீ4ஷ்ட ப்ரதா3 தோ3ஷதூ3 

பக்தர்களின் அபீஷ்டங்களை அருள்பவனே. தயாய நம: உனக்கு என் நமஸ்காரங்கள். உன் பக்தர்கள், தகாத விஷயங்களில் ஈடுபடாமல், இந்த்ரிய நிக்ரஹங்களை அருள்கிறாய். அனைத்து செயல்களையும் செய்விப்பவனே. ஸ்வாமியே. பக்தர்களுக்கு ஞான, ஆனந்த, அபீஷ்டங்கள் ஆகியவற்றை அருள்பவனே. தோஷங்கள் அற்றவனே. 

869. ஸ்ரீ அபராஜிதாய நம:

அனஶ்வர ஶ்வர்ய ஸ்வரூபஅபராஜித நமோ

நினகி3ந்த உத்தமரில்லத3ந்த2 அஜித நீ

நினகபஜயவில்ல அபராஜிதாஹ்வய

ஷதி4 ஶக்தி நின்ன அதீ4 நியம்யவு ஸ்ரீ 

அழியாத செல்வங்களின் ஸ்வரூபனே. அபராஜிதனே. உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னைவிட உத்தமர்கள் யாருமில்லை. அஜிதனே. உனக்கு தோல்வி என்பது எப்போதும் இல்லை. தோல்வியில்லாமையை கொடுக்கும் மருந்தின் சக்தி உன் அதீனமாகவே இருக்கிறது. நீயே அனைத்தையும் நியமிப்பவன். லட்சுமிதேவியின் தலைவனே. 

***


No comments:

Post a Comment