Sunday, October 29, 2023

#298 - 879-880-881 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

879. ஸ்ரீ அர்ஹப்ரியக்ருதே நம:

அர்ஹ எந்த3ரெ பூஜ்ய பரமமுக்2 பூஜ்ய நீனே

அர்ஹரு 4க்தரு கு3ருக3ளு நின்ன அதி4ஷ்டான

அர்ஹப4க்தரன்ன ரக்ஷணாதி33ளன்ன மாடு3தி

அர்ஹப்ரியக்ருத் நமோ எம்பெ3 மத்கு3ருக3 வாயுஸ்த2 

அர்ஹ என்றால் பூஜ்யன். அனைவரையும்விட பரம முக்ய பூஜ்யன் நீயே. தகுதி பெற்ற பக்தர்கள், குருகள் ஆகியோரில் உன் அதிஷ்டானம் இருக்கிறது. உன் தகுந்த பக்தர்களை நீ காக்கிறாய். அர்யப்ரியக்ருதே உனக்கு என் நமஸ்காரங்கள். குர்வந்தர்கத மற்றும் வாய்வந்தர்கதனே. 

880. ஸ்ரீ ப்ரீதிவர்த்34னாய நம:

4க்தக்ருத ஸ்துதிவஹிபப்ரீதிவர்த்34 நமோ

4க்தி ப்ரேமாக்2 ப்ரீதி வர்த்3தி4ஸுவி ஹிததி3ந்த3 நீ

4க்தரிகெ3 வாத்ஸல்ய நீடி3 அனுக்3ரஹ மாடு3த்தா

ப்ரிதியிந்த3 பு3த்4யாதி33ளன்னித்து ஸலஹுவி 

பக்தர்கள் செய்யும் ஸ்துதிகளை ஏற்றுக் கொள்பவனே. ப்ரீதிவர்த்தனே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தி, அன்புடன் கூடிய பக்தியை வளர்க்கிறாய். அன்புடன் நீ பக்தர்களுக்கு வாத்ஸல்யத்தை அருளி, அருளியவாறு, அன்புடன் புத்தி ஆகியவற்றை அருளி காக்கிறாய். 

881. ஸ்ரீ விஹாயஸக3தயே நம:

விவித4 த்3ரவ்ய ஸம்ப3ந்த4 கைக3ளுள்ளவனு நீனு

தே3 தே3வோத்தமவிஹாயஸக3தே நமோ எம்பெ3

ஸ்ரீவர ஸ்ரீகர நாராயண 3ருட3 ஆரூட3

த்3ரவ்ய எரடு3 ஹஸ்ததி3ந்த3 பாசி பாசி கொடு3த்தி 

பற்பல த்ரவ்யங்களைக் கொண்ட கைகளைக் கொண்டவனே. தேவ தேவோத்தமனே. விஹாயஸகதயே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீவரனே. ஸ்ரீகர நாராயணனே. கருடன் மேல் அமர்ந்திருப்பவனே. உன் இரு கைகளாலும் த்ரவ்யங்களை வாரி வாரி உன் பக்தர்களுக்கு அருள்கிறாய். 

***


No comments:

Post a Comment