ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
834. ஸ்ரீ ந்யக்3ரோதோ3து3ம்ப3ராய நம:
தே3ஹ பெ3ளஸுவி ஆரோக்3யவர்த்3த4ன மாடி3 மத்து
மஹாக்ஷ்த்ரியர க3ர்வாதி3 மத3வ க்ஷயமாள்பி
ஸ்ரீஹரே ‘ந்யக்3ரோதோ3து3ம்ப3ர’ நமோ நமோ நினகெ3
ப3ஹுத3யதி3 தே3ஹ ஆரோக்3ய ஆயுஸ் ப4க்தி ஈயோ
ஆரோக்யத்தை அருளி தேகத்தை வளர்ப்பவனே. மற்றும் க்ஷத்ரியர்களின் கர்வங்களை குறைத்து, அழிப்பவனே. ஸ்ரீஹரியே. ந்யக்ரோதோதும்பரனே. உனக்கு என் நமஸ்காரங்கள். தயவு செய்து, தேக ஆரோக்யம், ஆயுள், பக்தி ஆகியவற்றை அருள்வாயாக.
835. ஸ்ரீ அஶ்வத்தா2ய நம:
நித்ய இருவ அங்குஷவுள்ள ‘அஶ்வத்த2னே’ நமோ
ஸூர்யாதி3க3ளு நின்ன சக்ஷுராத்3யங்க3 உத்பன்னரு
நியாமகனாகி3 நீ அவரொள் திஷ்டனாகி3ருவி
நித்யானித்ய ஜக3ன்னியாமக ஸ்ருஷ்டாபாதா அத்தா
நித்யனே. அங்குஷ தரித்தவனே. அஷ்வத்தனே. உனக்கு என் நமஸ்காரங்கள். சூர்யாதிகள் உன்னுடைய கண்களிலிருந்து தோன்றியவர்கள். நீயே அவர்களில் நியாமகனாக இருந்து, செயல்களை செய்கிறாய். நித்ய அனித்ய ஜீவர்கள் இருப்பதான இந்த உலகத்தை நியமிப்பவனே. படைப்பவனே. அழிப்பவனே. அவர்களில் இருப்பவனே.
836. ஸ்ரீ சாணூராந்த4 நிஷூத4னாய நம:
பூஜ்ய ஸ்துத்ய ஸுக2ப்ரத3 ‘சாணூராந்த4 நிஷூத4ன’
நிஜ பா4வதி3 நமோ நினகெ3 ஸர்வஜக3த்ஸ்வாமி
அஜித நீ சாணூராதி3 மல்லரன்ன ஸம்ஹரிஸி
ஆஜியலி து3ர்யோத4னாதி4க3ள கொல்லிஸிதி3யோ
பூஜ்யனே. ஸ்துத்யனே. ஸுகப்ரதனே. சாணூராந்த நிஷூதனனே. உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்து உலகங்களின் ஸ்வாமியே. அஜிதனே. சாணூர முதலான மல்லர்களை நீ அழித்தாய். போரில் துரியோதனன் முதலானவர்களை நீ கொல்லச் செய்தாய்.
***
No comments:
Post a Comment