Tuesday, October 31, 2023

#300 - 885-886-887 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

885. ஸ்ரீ விப4வே நம:

விஶிஷ்டானந்தா3த்3வைஶ்வர்ய பூர்ணவுள்ளவிபு4நமோ

விஶ்வ ஸ்ருஷ்டிஸ்தி2திலய நியதிஞான அஞ்ஞான

ஹ்ரஸ்வ தீ3ர்க்க4 3ந்த4 மோக் கர்த்ரு விஶிஷ்ட ஶ்வர்ய

ஶாஶ்வதவுள்ளவனு 3ருட3வாஹன ஸ்ரீ நாத2 

அபாரமான ஐஸ்வர்யங்களை முழுமையாக கொண்டிருக்கும் விபவே உனக்கு என் நமஸ்காரங்கள். உலகின் ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய, நியமன, ஞான, அஞ்ஞான, பந்த மோக்‌ஷ ஆகிய அஷ்ட கர்த்ருத்வங்களை செய்பவனே. அபாரமான ஐஸ்வர்யங்களை நிரந்தரமாக கொண்டவனே. கருட வாகனனே. ஸ்ரீநாதனே. 

886. ஸ்ரீ ரவயே நம:

ஸ்தவ்யனு நீனு ரவியெந்து3 கரெஸிகொம்பி3 நமோ

நால்வேத3 பாஞ்சராத்ரக3 மஹாபா4ரத

க்ருஷ்ணத்3வைபாயன க்ருத புராண மூலராமாயண

தி3வ்ய இவு அனுஸரிப மஹாத்மோக்தியிம் ஸ்தவ்ய 

புகழப்படுபவனே, நீ ரவி என்று அழைத்துக் கொள்கிறாய். உனக்கு என் நமஸ்காரங்கள். நான்கு வேத, பாஞ்சராத்ர ஆகம, மகாபாரத, ஸ்ரீவேதவ்யாஸர் இயற்றிய புராண, மூல ராமாயண ஆகிய ஸதாகமங்கள் இவை உன்னை புகழ்கின்றன. ஸ்தவ்யனே. 

887. ஸ்ரீ விலோசனாய நம:

ஸௌந்த3ர்ய த்3யுதி செல்லுவ வஜ்ரகரவிலோசன

ஸதா3 நமோ 3ர்ஷன மாத்ரத3லி 4க்தரபாப

பெ3ந்து3 போபுது3 தை3த்யரனு 4க்தத்4வேஷிக3ளனு

சே23 கை3ஸுவுது 4க்தர்கெ3 ஸுக2ஞான ப்ரதா3 

அழகான, அற்புதமான, வஜ்ரத்தை பிடித்திருப்பவனே. விலோசனனே. உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னுடைய தரிசன மாத்திரத்திலாயே, பக்தர்களின் பாவங்கள் வெந்து போகின்றன. தைத்யர்களை, பக்த த்வேஷிகளை உன்னுடைய பார்வை கொல்கிறது. பக்தர்களுக்கு சுக ஞானங்களை கொடுப்பவனே. 

***


No comments:

Post a Comment