Wednesday, October 4, 2023

#277 - 819-820-821 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***  

819. ஸ்ரீ குமுதா3 நம:

குமுத3நீ யக்3ஞவ ப்ரவ்ருத்திஸுவி நமோ எம்பெ3

பூ4மிஜனரிகெ3 ஸுக2வீவி விஶ்வபாலகனு

பூ4மிமண்ட3லத3ல்லி ஹிதகர மளெ பெ3ளெய

ஸ்வாமி நீ ஒத3கி3ஸி ப்ராணிக3ளிகெ3 ஸுக2வீவி 

குமுதனே. நீயே யக்ஞங்களை வளர்க்கிறாய். உனக்கு என் நமஸ்காரங்கள். பூமியில் உள்ள மக்களுக்கு சுகத்தை அளிக்கிறாய். உலகத்தை காப்பவனே. பூமி மண்டலத்தில் அனைவரும் இதம் தருவதான மழையை பெய்விப்பாயாக ஸ்வாமி. நீ தரிசனம் அளித்து, ப்ராணிகளுக்கு சுகத்தை அளிப்பாயாக. 

820. ஸ்ரீ குந்த3ராய நம:

அஸத்யரத கபட குடில ஆததாயி

குத்ஸித இந்த2ஜனர நாஶககுந்த3 நமோ

குஸும ஶ்ரேஷ்ட பிளிமல்லிகெ3 ப்ரியனு 4க்தரு

அர்ச்சிஸெ ப்ரீதனாகு3 ஶிஷ்டபால து3ஷ்டஹர 

பொய் பேசுபவர்கள், கபட, தந்திரம் மிக்கவர்கள், கயவ மனம் கொண்டவர்கள் ஆகியோரை அழிப்பவனே. குந்தரனே உனக்கு என் நமஸ்காரங்கள். சிறந்ததான வெள்ளை மல்லிகையை விரும்புபவன். அதனால் பக்தர்கள் அர்ச்சனை செய்தால் மகிழ்பவன். சிஷ்யர்களை காப்பவன். துஷ்டர்களை அழிப்பவன். 

821. ஸ்ரீ குந்தா3 நம:

வேத3வாக்யக3ளிந்த3 ஸ்ராவ்யனுகுந்த3நமோ எம்பெ3

வேதே3ராமாயணேசைவ புராணே பா4ரதே ததா2

ஆதா3வந்தேச மத்4யே விஷ்ணு: ஸர்வத்ரகீ3யதே

உத்க்ருஷ்ட தாரக கு3ணரூப க்ரியாதி3 ஶ்ரவண 

வேத வாக்கியங்களால் போற்றப்படுபவன். குந்தனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ‘வேதே ராமாயணேசைவ என்னும் மந்திரம் உன்னையே புகழ்கிறது. நற்குணங்கள், நல்ரூபம், நற்செயல்களை கொண்டவனே. 

***


No comments:

Post a Comment