ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
864. ஸ்ரீ த4னுத4ராய நம:
‘த4னுர்த4ரனே’ வஜ்ராதி3 ஆயுத4த4ரனே நமோ
வைஷ்ணவ த4னுஸ் பரஶுராம ரூபதி3 த4ரிஸிதி3
ஆ த4னவ ஹூடி3 அதுலாஸுரன்ன கொந்தி3 ராமா
த4னுஶ்ரேஷ்ட ஶார்ங்க3 த4னுர்தா4ரியே ஸதா3 ஶரணு
தனுர்தரனே. வஜ்ர முதலான ஆயுதங்களை தரித்தவனே. வைஷ்ணவ தனுஸ்ஸினை, பரசுராம ரூபத்தினால் நீ தரித்தாய். அதனை ஏந்தி, பற்பல அசுரர்களை கொன்றாய். ராமனே. தனுஸ்களில் சிறந்ததான ஷார்ங்க என்னும் தனுஸ் ஏந்தியவனே. உன்னை எப்போதும் நான் வணங்குகிறேன்.
865. ஸ்ரீ த4னுர்வேதா3ய நம:
அஸ்த்ரோபயோக3க்3ஞ ப்4ருத்யருள்ளவ ‘த4னுர்வேத3னே’
ஸதா3 நமோ அர்ஜுனேந்த்3ராதி3 நின்ன ப்4ருத்யருக3ளிம்
அஸ்த்ரக3ளனு ப்ரயோகி3ஸி நிவாத கவசாதி3
தை3த்யர நிரோத4கெ3ய்ஸிதி3 ப்4ருத்ய ப்ரிய ஸ்ரீகிருஷ்ண
அஸ்திர ப்ரயோகம் செய்யும் ப்ருத்யர்களை கொண்டவனே. தனுர்வேதனே உனக்கு என் நமஸ்காரங்கள். அர்ஜுன, இந்திர முதலான உன்னுடைய ப்ருத்யர்கள் மூலமாக அஸ்திரங்களை ப்ரயோகம் செய்தாய். பற்பல தைத்யர்களை கொன்றாய். ப்ருத்யப்ரியனே கிருஷ்ணனே.
866. ஸ்ரீ த3ண்டா3ய நம:
நினகி3ந்தலு ஜீவரனு ந்யூனராகி3 மாடு3வி
ஞான ஸுக2 தேஜஸ் ப3ல பூர்ண ‘த3ண்ட3’ நமோ எம்பெ3
அனிமிஷ த்3வேஷிக3ளு தை3த்யரன்னு த3ண்டி3ஸுவி
வேணுகோ3பால வாமன ஸதா3 நினகெ3 ஶரணு
உன்னைவிட ஜீவர்களை குறைவானவர்களாகவே ஆக்குகிறாய் (ஸர்வோத்தமனே). ஞான, ஸுக, தேஜஸ், பல ஆகியவற்றை பூர்ணமாக கொண்டவனே. தண்டனே உனக்கு என் நமஸ்காரங்கள். தேவர்களின் எதிரிகள், தைத்யர்களை நீ தண்டிக்கிறாய். வேணுகோபாலனே. வாமனனே. எப்போதும் உன்னை வணங்குகிறேன்.
***
No comments:
Post a Comment