Friday, October 20, 2023

#290 - 858-859-860 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

858. ஸ்ரீ ஸர்வகாமதா3 நம:

ஞானாதி3 ஸர்வமனோரத2 ஈவஸர்வகாமதா3

ஆனமோ 4க்தேஷ்டப்ரத3 ஸ்ரீய:பதி மஹா உதா3ரி

க்ஷோணியலி ஜீவர்க3 புண்யபாபயோக்3யதெய

அனுஸரிஸிர்ப ஸர்வரிகு3 மனோரத2 ஈவி 

ஞானம் முதலான அனைத்து இஷ்டார்த்தங்களையும் கொடுப்பவனே. ஸர்வகாமதனே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்களின் இஷ்டங்களை நிறைவேற்றுபவனே. லட்சுமிதேவியின் தலைவனே. கருணை உள்ளம் கொண்டவனே. இந்த பூமியில் ஜீவர்கள் செய்யும் புண்ய, பாவங்களுக்கு ஏற்ப, அவர்களின் யோக்யதைக்கு ஏற்ப, அனைவருக்கும் அந்தந்த தக்க மனோரதங்களை வழங்குபவனே. 

859. ஸ்ரீ ஶ்ரமாய நம:

சென்னாகி3 ஹ்ருத3யகு3ஹெயொள் கு3ப்தஶ்ரம நமோ

ஏனு ஶ்ரமரஹித ஶ்ரமர முக்தர ஸ்வாமி

ஹனுமந்தகெ3 ஶ்ரமவில்ல ஹனுமனஸ்வாமி நீனு

தா3னவரிகெ3 ஆஸமந்தாத் ஶ்ரம கொடு3வவனு 

இதய குகைக்குள் ரகசியமாக மறைந்திருப்பவனே. ஆஸ்ரமனே உனக்கு என் நமஸ்காரங்கள். எவ்வித சிரமங்களும் இல்லாதவனே. பக்தர்களின், முக்தர்களின் ஸ்வாமியே. ஹனுமந்தனுக்கு எவ்வித சிரமமும் இல்லை. அத்தகைய ஹனுமந்தனின் ஸ்வாமி நீ. அசுரர்களுக்கு அபாரமான சிரமங்களை கொடுப்பவன் நீயே. 

860. ஸ்ரீ ஶ்ரமணாய நம:

ஞானக்கெ காரணனு ஞான ஸாத4 மாடி3ஸுவி

ஞான பூர்ணஶ்ரமண நமோ நமோ எம்பெ3 நினகெ3

ஞானயோக3 ஆசரிப ஸன்யாஸிக3ளு நின்ன

த்4யானிஸுவரு ஸர்வதா3 அந்தா2 மஹாப்ரபு வ்யாஸ 

ஞானத்திற்கு காரணன் நீயே. ஞானத்திற்கான ஸாதனைகளை நீயே செய்விப்பாய். ஞானபூர்ணனே. ஸ்ரமணனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஞான யோகத்தை பின்பற்றும் சன்யாசிகள் உன்னையே தியானம் செய்கின்றனர். எப்போதும் இருப்பவனே. எல்லை அற்றவனே. மஹாபிரபுவே. வ்யாஸனே. 

***


No comments:

Post a Comment