ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
822. ஸ்ரீ பர்ஜன்யாய நம:
யுத்3த4 லாப4வீவவனு ‘பர்ஜன்ய’ நமோ நினகெ3
தௌ3த்யவஹிஸி யுத்3த4லாப4வ இத்தி பாண்டவர்கெ3
தா3ர்த்தராஷ்ட்ரரன்னு நிக்3ரஹ மாடி3ஸி ஜயவித்து
ஸத்யஸந்த4ரிம் உக்த ‘பரஞ்சயம் யஸ்மாத்’ எந்து3
போரில் வெற்றியை அருள்பவனே. பர்ஜன்யனே. உனக்கு என் நமஸ்காரங்கள். போரில் நடுநிலை வகித்து, பாண்டவர்களுக்கு அந்த போரில் வெற்றியை அருளினாய். திருதராஷ்டிரனின் மக்களை அழித்து, பாண்டர்களுக்கு வெற்றியை கொடுத்தாய். ‘பரஞ்சயம் யஸ்மாத்’ என்று ஸத்யஸந்தர்கள் உன்னையே புகழ்கிறார்கள்.
823. ஸ்ரீ பாவனாய நம:
ஆனந்த3 கொடு3வவனு ‘பாவன’ நமோ நினகெ3
புனீத மாடு3வவ நீனு பாவன எனிஸுவி
நீனு ரக்ஷிஸுதி பாவன மாடி3 பூ4பாலரன்னு
நீனு வாயு தே3வாந்தஸ்த2னு பாவன தோ3ஷதூ3ர
மகிழ்ச்சியை கொடுப்பவனே. பாவனனே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைவரையும் புனீதர் ஆக்குகிறாய். நீ பாவனன் எனப்படுகிறாய். அரசர்களை காத்து அவர்களை புனீதர் ஆக்குகிறாய். வாயுதேவரின் அந்தரயாமியாக இருப்பவனே. தோஷங்கள் அற்றவனே.
824. ஸ்ரீ அனிலாய நம:
அன்ய ப்ரேரகரில்ல மோஹாதி3க3ளு நினகி3ல்ல
‘அனில’ நமோ உத்க்ருஷ்டதம பூர்ணஞானாத்ம
அனாலோசனய லக்ஷ்மி மத்து ஸர்வ சராசர
ஞான அனன்யாதீ4னவாகி3 நினகு3ண்டு ஸ்வாமி
உன்னை வழி நடத்துபவர்கள் வேறு யாரும் இல்லை. உனக்கு மோகம் முதலானவை இல்லை. அனிலனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஸர்வோத்தமனே. பூர்ண ஞானாத்மனே. லட்சுமி மற்றும் அனைவரைப் பற்றிய ஞானம், முழுவதுமாக, சிந்தனை செய்யாமலேயே உனக்கு இருக்கிறது, ஸ்வாமியே.
***
No comments:
Post a Comment