Friday, October 13, 2023

#283 - 837-838-839 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***  

837. ஸ்ரீ ஸஹஸ்ரார்ச்சிஷே நம:

பூஜ்ய ஶ்வக3ளுள்ளஸஹஸ்ரார்ச்சி நமோ நினகெ3

தேஜ:புஞ்ச நீனு ஸூர்ய மண்ட3 மத்4யவர்த்தி

ஜக3த் ஸர்வபாஸகனாகி3ருதி ஸோமாக்3னி

தேஜஸ்ஸு நின்னய தேஜஸ்ஸினிந்த3 ப்ரகாஶிஸுதிதெ3 

சிறந்ததான குதிரைகளைக் கொண்டவனே. ஸஹஸ்ரார்ச்சியே. உனக்கு என் நமஸ்காரங்கள். தேஜஸ் கொண்டவனே. சூர்ய மண்டல மத்யவர்த்தியாக இருப்பவனே. இந்த உலகத்தை காப்பவனாக இருக்கிறாய். சந்திரன், அக்னி ஆகியோர்களின் தேஜஸ் உன்னுடைய தேஜஸ்ஸிலிருந்து வருகிறது; அதனாலேயே அவர்கள் ஒளிர்கிறார்கள். 

838. ஸ்ரீ ஸப்தஜிஹ்வாய நம:

யக்3 வாடமக்3 த்3ருஷ்ட்யாதி3 உள்ளஸப்தஜிஹ்வனே

தோயஜாங்க்3ரியலி நமிபெ ஸலஹென்ன 3யதி3

அக்3ன்யந்தர்க3 பரஶுராமனே ஶரணெம்பெ3

யக்3ஞவ்ரத ஜமத3க்3னிகெ3 ஸப்தரிஷி பத3வித்தி 

யக்ஞங்களில் வளர்க்கப்படும் நெருப்பினையே கண்களாகக் கொண்ட ‘ஸப்தஜிஹ்வனே உன் பாதங்களில் விழுந்து வணங்குகிறேன். கருணையுடன் என்னை அருள்வாயாக. அக்னியின் அந்தர்கதனான பரசுராமனே. உன்னை வணங்குகிறேன். யக்ஞங்களால் உன்னை வணங்கிய ஜமதக்னிக்கு ஸப்தரிஷியில் ஒரு பதவியை அளித்தாய். 

839. ஸ்ரீ ஸப்த்யைதஸே நம:

3ஹு தேஜஸ்ஸுள்ளவனுஸப்த்யைதா3நமோ நினகெ3

மஹாஞானி ஸப்தரிஷிக3 வர்த்தி4ஸுவி நீனு

மஹாயக்3ஞத3லி ஸப்தவனஸ்பதி ஸமிதா4தி3

ஸோம ஹவிஷ்ய பாகதி3 ப்ரீதிஸுவவரு நின்னன்ன 

அபாரமான தேஜஸ் கொண்டவனே. ஸப்த்யைதனே உனக்கு என் நமஸ்காரங்கள். மகாஞானிகளான ஸப்தரிஷிகளை காப்பவனே. மஹாயக்ஞத்தில் ஸப்த வனஸ்பதி, ஸமித்து, ஸோம, ஹவிஸ் ஆகியவற்றால் உன்னை அனைவரும் திருப்திப்படுத்துகிறார்கள்.

***


 

No comments:

Post a Comment