Friday, October 27, 2023

#296 - 873-874-875 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

873. ஸ்ரீ ஸத்யவதே நம:

ஶ்ரேஷ்டதம மஹாகு3ணவந்தனுஸத்யவான் நமோ

ப்ரக்ருஷ்ட ஆம்னாயாதி3 ஸதா33மக3ள்கு3 அமித

உத்க்ருஷ்ட கு3ணகு3ணார்ணவ தோ3ஷதூ3ரனு நீனு

ஶ்ரேஷ்டதம ஸ்ரீமன் நாராயண ஸ்ரீ ஸர்வகர்த 

ஸர்வோத்தமனே. மஹாகுணவந்தனே. ஸத்வதே உனக்கு என் நமஸ்காரங்கள். வேதாதி அனைத்து ஆகமங்களும் சிறந்தவனான உன்னையே புகழ்கின்றன. குணங்களின் ஸாகரமே. தோஷங்கள் அற்றவனே. நீயே ஸர்வோத்தமன். ஸ்ரீமன் நாராயணன். லட்சுமிதேவியின் தலைவனே. அனைத்தையும் செய்பவன். 

874. ஸ்ரீ ஸாத்விகாய நம:

4க்தருக3ளன்ன ஞானவந்தரன்னாகி3 மாடு3வவ

4க்தேஷ்டஸாத்விக நமோ ஸ்ரீ ஸ்ரீமன் நாராயண

ஸத்வ ஸத்வ மஹாஸத்வ ஸூக்ஷ்ம ஸத்வ சதுர்முக2

மொத3லாத3 ஸாத்1 ஜனர்கெ3 ஸுக2 ஸதா3 கொடு3வி 

உன் பக்தர்களை ஞானவந்தராக ஆக்குகிறாய். பக்தர்களால் விரும்பப்படுபவனே. ஸாத்விகனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. ஸ்ரீமன் நாராயணனே. மஹாஸத்வரான, ஸூக்‌ஷ்ம ஸத்வரான சதுர்முக பிரம்மதேவரே முதலான அனைவருக்கும் எப்போதும் சுகத்தை கொடுப்பவனே. 

875. ஸ்ரீ ஸத்யாய நம:

4க்தரு ஸாத்விக ஸ்வபா4விக3ளன்னு குரிது நீ

4க்தப்ரிய ஹோகு3வி நீனாகி3ஸத்ய நமோ எம்பெ3

ஸத்யப்ரிய 4க்தேஷ்ட ஸத்யஞானானந்த3 விஶ்வ

வ்யாபக ஸத்யவந்தர போஷக தை3த்ய ஸம்ஹார 

ஸாத்விக ஸ்வபாவங்களை கொண்ட பக்தர்களைக் குறித்து நீயே செல்வாய். பக்தப்ரியனே, ஸத்யனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸத்யப்ரியனே. பக்தர்களால் விரும்பப்படுபவனே. ஸத்யஞானானந்தமயனே. விஷ்வவ்யாபகனே. ஸந்தவந்தர்களை காப்பவனே. தைத்யர்களை கொல்பவனே. 

***


No comments:

Post a Comment