ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
828. ஸ்ரீ ஸர்வதோமுகா2ய நம:
ஸர்வ த்3வேஷிகள நாஷக ‘ஸர்வதோமுக2’ நமோ
விஷ்வத: சக்ஷு ‘உக்3ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம்
ஸர்வதோமுக2ம்’ எந்து3 ப்ரஸித்3த4 பாஞ்சராத்ரோக்தவு
பூர்வாதி3 ஸர்வ திக்குமுக2த்வதி3ம் ஸர்வதோமுக2
அனைத்து அசுரரக்ளையும் அழிப்பவனே. ஸர்வதோமுகனே. உனக்கு என் நமஸ்காரங்கள். விஷ்வத: சக்ஷுவே. ‘உக்ரம் வீரம்’ என்று பாஞ்சராத்ரத்தில் போற்றப்படுபவனே. கிழக்கு முதலாக அனைத்து திசைகளிலும் முகத்தை கொண்டிருப்பவனே. ஸர்வதோமுகனே.
829. ஸ்ரீ ஸுலபா4ய நம:
பூர்ணவு உத்தமவு நிர்து3ஷ்டவாத்3து4 ஸு எம்பு3து3
ஞான ஸுகை2ஸ்வர்யவு லாப4வுள்ளவனு தா3தனு
நீனு ‘ஸுலப4’ நமோ ஸுரேந்த்3ராதி3யொளு ப்ரகாஶ
ஆம்யாயார்த்த2 ஸுநிஷ்சித ஞானோபாஸனதி3ம் லப்4ய
பூர்ணமானது. உத்தமமானது. தோஷங்கள் அற்றதான, ஞான சுக ஐஸ்வர்ய லாபங்களை கொண்டவனே. இவற்றை பக்தர்களுக்கு அளிப்பவனே. நீயே ஸுலபன் எனப்படுகிறாய். உனக்கு என் நமஸ்காரங்கள். தேவர்களில் நீயே ஸுலபன். வேதங்களில் சொல்லியபடி, ஞானோபாஸன செய்தால் நிச்சயமாக தரிசனம் / அருள் வழங்குபவனே.
830. ஸ்ரீ ஸுவ்ரதாய நம:
நிர்து3ஷ்ட உத்தம த்4யானயோக3வுள்ளவ தத்3தா4தனு
ஸ்ரீத3 ‘ஸுவ்ரத’ நமோ நினகெ3 பரமைக த்4யேய
ப4க்திஞானயுக் கர்மமாடி3 த்4யானிப ஶரணர
ஸதா3 பரிபாலிப ஸுத்4ருட3வ்ரதனு ஸுவ்ரத
தோஷங்கள் அற்றவனே. உத்தமனே. த்யானிக்க யோக்யம் கொண்டவனே. அவற்றை பக்தர்களுக்கு வழங்குபவனே. ஸ்ரீதனே. ஸுவ்ரதனே. உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தி, ஞானங்களுடன் தக்க கர்மங்களை செய்து, உன்னை த்யானம் செய்யும் பக்தர்களை எப்போதும் நீ அருள்கிறாய். த்ருடவிரதனே. ஸுவ்ரதனே.
***
No comments:
Post a Comment