Tuesday, December 19, 2023

#338 - பல ஸ்துதி - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

வாயுஸ்த2 விஷ்ணு கேஶவ ஸர்வோத்தம ஸ்ரீபதிய

தி3வ்ய நாம ஸஹஶ்ரவ படிஸுவர்க்கெ3 கேள்வர்க்கெ3

காய மன கஷ்டபா3ரது3 ஶுப4வு பா3ரது3

ஆயுராரோக்3 ஸுகா2தி3 மங்க3 லபி4ஸுவுது3 ||1 

வாயு அந்தர்யாமியாக இருப்பவனே. விஷ்ணு. கேஷவனே. ஸர்வோத்தமனே. ஸ்ரீபதியின் இந்த திவ்ய ஸஹஸ்ர நாமத்தை படிப்பவர்களுக்கு, கேட்பவர்களுக்கு, தேகத்திற்கு / மனதிற்கு கஷ்டங்கள் வராது. அஷுபங்கள் வராது. ஆயுள், ஆரோக்ய சுகாதி மங்களங்கள் கிடைக்கட்டும். 

தி3வ்ய ஸ்தோத்ர விஷ்ணு ஸஹஸ்ர நாமவு ஸ்ரீபதி

வேத3வ்யாஸ 43வந்தனிந்த3 கீர்த்திதவு 4க்தி

ஶ்ரத்தெ3யிம் த்ரிகரண ஶுசியிம் படிஸீ கேள்வுது3

ப்ரத2 4ர்ம ஆசார 4ர்மஸ்ய ப்ரபு3 அச்யுத ||2 

இந்த திவ்யமான ஸ்தோத்ரமான விஷ்ணு ஸஹஸ்ர நாமம், ஸ்ரீபதியான ஸ்ரீவேதவ்யாஸ பகவந்தனால் இயற்றப்பட்டது. பக்தி ஸ்ரத்தையுடன், த்ரிகரண ஷுத்தியுடன் இதனை படிப்பது, கேட்பது - இதுவே நம் ப்ரதம தர்மமாக ஆசாரமாக இருக்க வேண்டும். ‘தர்மஸ்ய ப்ரபு அச்யுத:’ பகவந்தன் இதனால் மகிழ்கிறான். 

விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர மஹாமந்த்ரவன்ன

பீ4ஷ்மரு யுதி3ஷ்டிரகெ3 போ3தி4ஸல்கெ பூர்வத3லு

கிருஷ்ணப்ரீதி ஆகு3வந்த போ4தி4ஸிதா3னந்தரவு

ஶ்ரேஷ்டதம ஶ்ரவண கீர்த்தன 2லவ ஹேளிஹரு ||3 

விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர மஹா மந்த்ரங்களை பீஷ்மர், யுதிஷ்டிரனுக்கு போதிக்க, இதனால், ஸ்ரீகிருஷ்ண ப்ரீதி ஆகும் என்று கூறினார். பிறகு, இதனை கேட்பதால், சொல்வதால், வருவதான பலன்களையும் கூறினார். 

தி3வ்ய நாமக3 பா4ஷ்யரூப ஸ்தோத்ரக3ளு

தி3வ்ய கன்னட3 நுடிக3ளு ஸம்ஸ்க்ருத அஷ்டி 2ந்த3ஸ்

ஸிகெ3 அளவடி3ஸி இஹவு ஸூத்ர உபநிஷத்

ஸுவாக்3யோதா3ஹ்ருதவு ஶ்ரவண ஸௌபா4க்3யப்ரத3வு ||4 

திவ்ய இந்த நாமங்களின் பாஷ்ய ரூபமான ஸ்தோத்ரங்களான, இந்த திவ்ய கன்னட நுடிகளை, சம்ஸ்க்ருத அஷ்டி சந்தஸ்க்கு பொருத்தப்பட்டுள்ளது. இதனை படிப்பதால், கேட்பதால், சௌபக்கியங்கள் வருகின்றன. 

ஏகோ விஷ்ணுர் மஹத்பூ4தம் ப்ருத2க்3 பூ4தான்யனேக:

த்ரீல்லோகான் வ்யாப்ய பூ4தாத்மா பு4ங்க்தே விஷ்வபு43வ்யய: |

விஶ்வேஶ்வரமஜம் தே3வம் ஜக3: ப்ரப4வாப்யயம்

பு4ஜந்தி யே புஷ்கராக்ஷம் தே யாந்தி பராப4வம் ||5 

அர்ஜுன உவாச:

பத்3மபத்ர விஸாலாக் பத்3மனாப4 ஸுரோத்தம

4க்தானாம் அனுரக்தானி த்ராதாப4 ஜனார்த்34 || 

ஸ்ரீ 4கவான் உவாச

யோ மாம் நாம ஸஹஸ்ரேண ஸ்தோதுமிச்சதி பாண்ட3

ஸோs மேகேன ஸ்லோகேன ஸ்துத யேவ ஸம்ஷய: ||6 

பி3ரம்ம உவாச

நமோஸ்து அனந்தாய ஸஹஸ்ர மூர்த்தயே

ஸஹஸ்ரபாதா3க்ஷி ஶிரோருபா3ஹவே

ஸஹஸ்ர நாம்னே புருஷாய ஶாஶ்வதே

ஸஹஸ்ர கோடி யுக3தா4ரிணே நம: 

**

|| இதி ஸ்ரீ பிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸார்ய விரசித ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர ரூப பாஷ்யம் ஸம்பூர்ணம் ||

|| ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து||

***



Monday, December 18, 2023

#337 - 997-998-999-1000 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

997. ஸ்ரீ 3தா34ராய நம:

ஸ்துதிஸுவர ஶ்வக3ளிந்த3 ஹோகு3வவ நீனு

3தாத4 நமோ நினகெ3 ஸ்துதிப 4க்தர்க3

இந்த்3ரிய ப்ராணாதி3 ஶ்வத்த2 நியாமக ஸ்ரீ நீ

மோத3ப்ரஸாத3 ஹொந்தொ3 மார்க்க3தி3 நடெ3ஸுவி வாயுஸ்த2 

துதிப்பவர்களின் இந்திரியங்களால் செல்பவனே. கதாதரனே. உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னை துதிக்கும் பக்தர்களின் இந்த்ரிய ப்ராணாதி அஷ்வத்தங்களை நியமனம் செய்பவனே. ஸ்ரீஷனே. உன்னுடைய ப்ரஸாதத்தை அடையும் வழியில் நீயே எங்களை நடத்துகிறாய். வாயு அந்தர்யாமியாக இருப்பவனே. 

998. ஸ்ரீ ரந்தா2ங்க3பாணியே நம:

ஸுக2ப்ராபக புத்ராதி3ப்ரதரதா2ங்க3பாணியே

ஸ்ரீகளத்ரனே நமோ தே3வகிபுத்ரனே ஶரணு

சக்ரபாணி நீ 3ர்ப்ப3ரக்ஷிஸி உத்தரெகெ3 புத்ர

பரீக்ஷிதன்ன கொட்டு கலி நிரோத4 மாடி3ஸிதி3 

சுகத்தை அருள்பவனே. புத்ராதிகளை அருள்பவனே. ரதாங்கபாணியே. ஸ்ரீகளத்ரனே உனக்கு என் நமஸ்காரங்கள். தேவகிபுத்ரனே. சக்ரபாணியே. உத்தரையின் கர்ப்பத்தை காத்தவனே. பரீக்‌ஷிதனுக்கு அருள் புரிந்து, கலியினை விலக்கினாயே. 

999. ஸ்ரீ அக்ஷோப்4யாய நம:

க்ஷோபெ4 இல்லத3 புத்ராதி3மான்அக்ஷோப்4யனே நமோ

க்ஷோபெ4 சாஞ்சல்யவில்ல த்வத்புத்ர வாயுதே3வனிகெ3

ஸுபூர்ணப3லஞானானந்த3 ஸ்வரூப நரஸிம்ஹ

ஶுப4தம கதா2ஷய நிர்விகார அனிர்விண்ண 

அழிவில்லாத மக்களை கொண்டவனே. அக்‌ஷோப்யனே. உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னுடைய மகனான வாயுதேவனுக்கு அழிவு, சாஞ்சல்யம் இல்லை. பூர்ணஞானானந்த ஸ்வரூபனே நாரஸிம்ஹனே. ஷுபதமமான நற்கதைகளை கொண்டவனே. நிர்விகாரனே. துக்கங்கள் அற்றவனே. 

1000. ஸ்ரீ ஸர்வப்ரஹரணாயுதா4  நம:

4க்தர்கெ3 கொட3லிக்கெ அஸுரர 4னாபஹார

கெ3ய்து3 4க்தரன்ன போஷிஸுவ ஜீவாதா4ரி ஹரே

மாத4வனேஸர்வப்ரஹரணாயுத4நமோ ஸர்வ

ஶத்ரு ஆயுத4 ஹரணஸர்வப்ரஹரணாயுத4 

பக்தர்களுக்கு கொடுப்பதற்கு அசுரர்களின் தனங்களை அபஹாரம் செய்பவனே. அதன் மூலம் பக்தர்களை காப்பவனே. ஜீவனை அருள்பவனே. ஹரே, மாதவனே. ஸர்வப்ரஹரணாயுதனே உனக்கு என் நமஸ்காரங்கள். எதிரிகளின் ஆயுதங்களை அழிப்பவனே. ஸர்வப்ரஹரணாயுதனே. 

***