Saturday, December 16, 2023

#335 - 991-992-993 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

991. ஸ்ரீ க்ஷிதீஶாய நம:

ஸ்தோத்ரப்ரசுர ஶப்4தக3 ஸ்ரோதாக்ஷிதீ நமோ

க்ஷிதீ பூ4பதி ராஜராஜேஶ்வர ஸ்வாமி நீனு

4க்தருமாள்ப ஸ்தோத்ரஶப்4 கிவிகொட்டாலிஸுவி

ஶ்ருதிஸ்ம்ருதி ப்ரமாணமுத1வு ஸாது4 ஸ்தோத்ரக3ளு

 

ஸ்தோத்திரங்களின் சப்தங்களை கேட்பவனே க்‌ஷிதீஷனே உனக்கு என் நமஸ்காரங்கள். பூபதி, ராஜராஜேஸ்வர ஸ்வாமி நீயே. பக்தர்கள் செய்யும் ஸ்தோத்ர ஷப்தங்களை காது கொடுத்து கேட்கிறாய். ஸ்ருதி, ஸ்ம்ருதி, ப்ரமாணங்கள் உன்னையே புகழ்கின்றன. ஸாதுகளின் ஸ்தோத்திரங்களை கேட்பவனே. 

992. ஸ்ரீ பாபனாஶனாய நம:

ஸர்வதோ3ஷதூ3ரனு நீ நின்ன ஸ்தோத்ர மாடு3வந்த

ஸாத்விக 4க்தரிகெ3 லேப அண்ட1தெ3 மாள்பி நீனு

ஸ்ரீவரனெபாபனாஶனனே நமோ நமோ எம்பெ3

ஸர்வபாப பாபாபி4மானி தை3த்ய நாஶகனு 

எவ்வித தோஷங்களும் அற்றவனே. உன்னை ஸ்தோத்ரம் செய்யும் ஸாத்விக பக்தர்களுக்கு எவ்வித தொந்தரவுகளும் அண்டாமல் நீ அவர்களை காக்கிறாய். ஸ்ரீவரனே. பாபனாஷனனே. உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்து பாவங்களையும், அந்த பாவங்களின் அபிமானி தைத்யர்களையும் அழிப்பவனே. 

993. ஸ்ரீ ஶங்க2ப்4ருதே நம:

தே3வதாஹ்வானக்கெ விஷயனு நீஶங்க2ப்4ருத் நமோ

தி3வ்ய பாஞ்சஜன்யாக்2 ஶங்க2 ஹஸ்தனு ஸ்ரீய:பதி

தே3 ஸ்ரீகர நாராயண நின்னிந்த3 தா4ர்யவாகி3

த்3ரவ்யபூரித ஶங்க2 நாமக நிதி4 ஸதா3 உண்டு 

வணங்கத்தக்க தெய்வம் நீயே. ஷங்கப்ருதே உனக்கு என் நமஸ்காரங்கள். திவ்ய பாஞ்சஜன்ய சங்கு பிடித்தவனே. ஸ்ரீய:பதியே. ஸ்ரீகர நாராயணனே. உன்னால் வழங்கப்பட்ட சங்கு எனப்படுவதான நிதி எங்களிடம் எப்போதும் உண்டு. 

***


No comments:

Post a Comment