Wednesday, December 6, 2023

#325 - 961-962-963 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

961. ஸ்ரீ ப்ரமாணாய நம:

மஹான் அமித நீப்ரமாணம் நமோ எம்பெ3 நினகெ3

அஹமேவாஸமக்3ரேச நான்யத் ஸத3ஸத் பரம்

ஶ்சாத3ஹம் யதே3சச்சயோs ஶிஷ்யேத ஸோsஸ்ம்யைஹம்

நீ ஸ்வதந்த்ர அபரிச்சின்னஸத்யம் ஞானம் அனந்தம் 

மஹானே. அமிதனே. ப்ரமாணனே உனக்கு என் நமஸ்காரங்கள். அஹமேவாஸமக்ரேச என்னும் ஸ்ருதியால் நீ புகழப்படுகிறாய். ஸ்வதந்த்ரனே. ஸத்ய ஞான அனந்த ரூபனே. 

962. ஸ்ரீ ப்ராண நிலயாய நம:

நதி3 ஸிந்து4 மேலகனுப்ராண நிலயனே நமோ

யத்ப்ராணேன ப்ரணிதியேன ப்ராண: ப்ரணீயதே

ததே3 பி3ரம்மமுக்2 வாயு நியாமகாஶ்ரயனு

இந்த்3ரியக3 நாடிக3 தா4ரகாஶ்ரய ஸமுத்3 

ஸிந்து நதியை படைத்தவனே. ப்ராண நிலயனே உனக்கு என் நமஸ்காரங்கள். யத்ப்ராணேன என்று ஸ்ருதி உன்னையே புகழ்கிறது. ப்ரம்ம, வாயு ஆகியோரின் நியாமகன், ஆஸ்ரயன் நீயே. இந்த்ரியங்களின், நாடிகளின், தாரகன் மற்றும் ஆஸ்ரயன் நீயே. 

963. ஸ்ரீ ப்ராணதா3 நம:

நிரோதி4 கோ33ள்கெ3 3திப்ரத3ப்ராணத3நமோ

இந்த்3ரியக3ளு ஸோதுஹோத3ரெ புன: சடுவடகெ

இந்த்3ரியபடுத்வ ஈவி ருஷிகே தே3ஹஸ்த2 ஆத்மா

அந்தராத்ம ஸுக2 சேஷ்டாப்ரத3 முக்2யவாயு அந்தஸ்த2 

ஆதரவற்ற பசுக்களுக்கு கதியை கொடுப்பவனே. ப்ராணதனே உனக்கு என் நமஸ்காரங்கள். இந்த்ரியங்கள் தோற்றால் (வேலை செய்யாவிட்டால்), மறுபடி அவற்றிற்கு நடவடிக்கைகளை செய்ய சக்தியை கொடுக்கிறாயே. ருஷிகேஷனே. தேகத்தில் இருக்கும் ஆத்மாவே. அந்தராத்மனே. சுக சேஷ்டைகளை அளிப்பவனே. முக்யப்ராணரின் அந்தர்யாமியே. 

***


No comments:

Post a Comment