Sunday, December 3, 2023

#322 - 952-953-954 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

952. ஸ்ரீ ஆதா4 நிலயாய நம:

யக்3ஞஸம்ப3ந்தி4 நீஆதா4ரநிலய நமோ எம்பெ3

யக்3ஞோவை விஷ்ணு: ஸர்வயக்3 ஆதா4ரனு வராஹ

நீ எல்ல ஜக3த்திகு3 ஆதா4ரனாகி3ருவி மத்து

ப்ரளயத3லி ஸர்வக்கு நிலயனாகி3ருதியோ 

யக்ஞத்திற்கு சம்பந்தப்பட்டவனே. ஆதார நிலயனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஸர்வ யக்ஞங்களுக்கு ஆதாரன் நீயே. வராகனே. நீ அனைத்து ஜகத்திற்கும் ஆதாரனாக இருக்கிறாய். மற்றும் ப்ரளயத்தில் அனைத்திற்கும் நிலயனாக இருக்கிறாய். 

953. ஸ்ரீ தா4த்ரே நம:

யக்3ஞத3லி 4னாதி3 யக்3 உபயோகி3யாகி3

த்3ரவ்யக3ளாதா4ரகனுதா4தா நமோ நமோ எம்பெ3

யக்3ஞபூஜன த்4யான ஸர்வ ஸத்ஸாத4னக3ள்கு3

ஆயா ஸாத4 மாள்பரிகு3 தா4ரக போஷகனு 

யக்ஞங்களில் பயன்படும் செல்வம் முதலான அனைத்து த்ரவ்யங்களுக்கும் ஆதாரகன் நீயே. தாத்ரே உனக்கு என் நமஸ்காரங்கள். யக்ஞத்தில் பூஜிக்கப்படுபவனே. த்யானிக்கப்படுபவனே. அனைத்து ஸத் ஸாதனங்களுக்கும், அந்தந்த ஸாதனங்களை செய்பவர்களுக்கும் தாரகனாகவும், போஷகனாகவும் இருக்கிறாய். 

954. ஸ்ரீ புஷ்பஹாஸாய நம:

போஷகத்வேன 4க்தன்ன ப்ரஸித்3தி4 மாடு3வி நீனு

புஷ்பஹாஸ நமோ நமோ 4க்தவத்ஸல க்ருபாளோ

போஷணதா4ரண 4ர்மவுள்ள கு3ணக3ணஸிந்தோ4

பூஷமண்ட3 மத்4யவர்த்திபூஷ புஷ்ப ஸுபூர்ண 

பக்தர்களை போஷித்து, ப்ரஸித்தி ஆக்குகிறாய். புஷ்பஹாஸனே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தவத்ஸலனே. க்ருபாளோ. போஷண தாரண தர்மம் உள்ளவனே. குணகண ஸிந்துவே. பூஷமண்டலத்தின் நடுவில் வசிப்பவனே. ஸுபூர்ணனே. 

***


No comments:

Post a Comment