ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
949. ஸ்ரீ ஜனஜன்மாத3யே நம:
‘ஜனஜன்மாதி3’ நீ ரத2த3ல்லிருவவனே நமோ
ஜனக3ளிகெ3 ஜன்மாதி3க3ளு நின்ன கர்த்ருத்வதி3
ஜனர தே3ஹ எம்ப3 ரத2த3லி ஸ்தா2யிரதி2க
இன ஷஷி உமாஶிவரிம் ஸேவ்ய ப்ராண ஹ்ரீ ஸ்ரீஶ
ஜனஜன்மாதயே உனக்கு என் நமஸ்காரங்கள். நீ தேகம் என்னும் இந்த ரதத்தில் இருக்கிறாய். மக்களுக்கு உன் கர்த்ருத்வத்தாலேயே ஜன்மாதிகள் வருகின்றன. மக்களின் தேகம் என்னும் ரதத்தில் நீ வீற்றிருக்கிறாய். சூர்ய, சந்த்ர, உமா, ருத்ர ஆகியோரால் வணங்கப்படும் ப்ராணரின் தலைவனே. ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே.
950. ஸ்ரீ பீ4மாய நம:
அஸுரரிகெ3 ப4யகொடு3வ ‘பீ4ம’ நமோ எம்பெ3
கம்ஸ ராவண கு ந்ருபரு ஹேமகஶ்யபாதி3க3ளு
ஈஶ நின்ன பீ4திகர பராக்ரமதி3ம் ஸோதரு
பா4ஸிஸுவி ஞான தேஜ:புஞ்ச வேத3வ்யாஸ கிருஷ்ண
அசுரர்களுக்கு பயம் கொடுக்கும் பீமனே உனக்கு என் நமஸ்காரங்கள். கம்ஸ, ராவண ஆகிய கெட்ட அரசர்கள், ஹிரண்யகசிபு ஆகியோர், உன்னுடைய அபாரமான, பயமுறுத்தும்படியான பராக்ரமத்தினால் தோற்றனர். ஞான தேஜஸ்களை கொண்டவனே. வேதவ்யாஸனே. க்ருஷ்ணனே. அனைவரையும் அருள்வாயாக.
951. ஸ்ரீ பீ4மபராக்ரமாய நம:
ப4யங்கர அஶ்வக3ளிந்த3 ப3ந்து3 அபீ4ஷ்டவன்னு
த3யதி3 கொடு3வவ ‘பீ4மபராக்ரமனே’ நமோ
ப4யக்ருத் வேகா3ஶ்வ ரத2த3லி ப3ந்து3 தை3த்யரு
பெ3ரகா3கி3 ஒய்தி3 ருக்மிணிய அபீ4ஷ்ட பூர்ணமாடி3
பலமான குதிரைகளில் வந்து அபீஷ்டங்களை கருணையுடன் கொடுப்பவனே. பீமபராக்ரமனே. உனக்கு என் நமஸ்காரங்கள். பயத்தை கொடுப்பவனே. ரதத்தில் வேகமாக வந்து, தைத்யர்களை கொன்றாய். ருக்மிணியின் விருப்பத்தை நிறைவேற்றினாய்.
***
No comments:
Post a Comment